நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராம்பாலாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ‘டாவு’ திரைப்படத்தில் கயல் நாயகன் சந்திரமவுலி நாயகனாகவும், ‘ஜருகண்டி’ நாயகி ரெபா மோனிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் முனீஸ்காந்த், மனோபாலா, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
2 மூவி பஃப்ஸ் பேனரின் கீழ் ரகுநாதன் தயாரிப்பில் உருவாகி வரும் டாவு திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கிட்டதட்ட நிறைவடைந்த நிலையில், க்ளைமேக்ஸ் காட்சியும், ஒரு பாடல் காட்சியும் மட்டும் படமாக்கப்படவுள்ளது.
தீபக் குமார் பாதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இந்நிலையில், டாவு படக்குழுவினர் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளனர்.