உலகநாயகன் தயாரிக்கும் படத்துக்காக விக்ரமின் பாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துவரும் படம் 'கடாரம் கொண்டான்'. இந்த படத்தை 'தூங்காவனம்' படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்கிவருகிறார்.

Vikram sings a motivational song for kamalhaasan's Kadaram Kondan

ஜிப்ரான் இசையமைத்து வரும் இந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில், பன்முக திறமைகொண்ட விக்ரம் சாருடன் பாடல்  பதிவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. முழு எனர்ஜியுடன் இந்த பாடைல அவர் பாடினார்.  உத்வேகத்தை அளிக்கக் கூடிய பாடலாக இது இருக்கும். என்றார்.

'கந்தசாமி' படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் எல்லா பாடல்களையும் விக்ரம் தான் பாடியிருந்தார். இந்த பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து 'தெய்வத் திருமகள்' உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.