'93-வது ஆஸ்கர் விருதுகள்'... 'நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லை'... சிறந்த இயக்குநர் விருதை தட்டி தூக்கிய 'குளோயி சாவ்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 26, 2021 12:30 PM

ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதைச் சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் பெற்றார்.

Zhao makes history with Oscar wins for best director

உலக அளவில் திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சினிமா துறையின் உச்சபட்ட விருதான ஆஸ்கரை பெறுவதில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

Zhao makes history with Oscar wins for best director

இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி, தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய 2 இடங்களில் ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Zhao makes history with Oscar wins for best director

சிறந்த இயக்குநர் விருதை 'Nomadland' படத்துக்காகச் சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் பெற்றார். சிறந்த துணை நடிகை Judas and the Black Messiah படத்துக்காக டேனியல் கல்லூயா பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான விருதை Promising Young Woman படத்துக்காக எமரால்டு பென்னல் பெற்றார்.

Zhao makes history with Oscar wins for best director

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை The Father படத்துக்காக கிறிஸ்டோபர் புளோரியன் பெற்றார். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதை Another Round பெற்றது. தொடர்ந்து பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிகழ்ச்சி ஆஸ்கார் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆஸ்கார் சமூக வலைத்தளங்களில்  நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Zhao makes history with Oscar wins for best director | World News.