சுத்தி கடல்.. ஃபுல் WIFI.. உலகத்தின் வைரல் வீட்டுக்கு இவ்வளோ டிமாண்டா? விலை எவ்வளவு? அப்படி என்ன இருக்கு ?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் தனிமையான வீடு என்றழைக்கப்படும் அமெரிக்காவிலுள்ள சிறிய இல்லம் தற்போதைக்கு விற்பனைக்கு வந்திருக்கிறது. இதிலுள்ள வசதிகள் குறித்து தான் இப்போது பலரும் பரபரப்புடன் பேசி வருகின்றனர்.
சுற்றி கடல், நடுவில் ஒரு சிறிய வீடு, மனித சஞ்சாரமே இல்லாத பிரதேசம், இயற்கை காற்று இதையெல்லாம் ஆசைப்படாத நபர்களே இந்த பூமியில் இருக்க முடியாது. அப்படியான ஆட்களுக்காக கட்டப்பட்டதுதான் அமெரிக்காவில் அமைந்துள்ள 'உலகின் மிகவும் தனிமையான வீடு'.
இந்த வீடு 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கே ஒரு பெட்ரூம் மற்றும் ஹால் அமைந்திருக்கிறது. சிறிய வீடு தான் என்றாலும் உள்ளே கண்கவர் மர நாற்காலிகள், வெளியில் ஊஞ்சல் என அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த வீடு. 540 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் இருந்து கடலை பார்ப்பது அருமையான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள் வீட்டின் தற்போதைய உரிமையாளர்கள்.
வைரல் புகைப்படம்
கொரோனா காலத்தில் இந்த வீட்டின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. காரணம் இதுதான். கொரோனா பெருந்தொற்று தங்குதடையின்றி மக்களிடையே பரவி வந்த போது "இது போன்ற ஒரு வீட்டில் போய் செட்டிலாகி விட வேண்டும்" என நெட்டிசன்கள் இந்த வீட்டின் புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர்.
2009 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த வீடு மேடான பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதால் கடல் பரப்பில் நீர்மட்டம் ஏறினாலும் இந்த வீட்டிற்கு ஒன்றும் ஆகாது என்கிறார்கள் இதன் உரிமையாளர்கள்.மேலும் இந்த குட்டித் தீவு முழுவதும் வைஃபை வசதி உள்ளது.
விற்பனை
அமெரிக்காவின் டக் லெட்ஜஸ் எனும் தீவில் அமைந்துள்ள இந்த வீட்டின் விலை 3 லட்சத்து 39 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 2.58 கோடி ரூபாய்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீட்டின் ஒரே குறை அல்லது கஷ்டம் என்றால் பாத்ரூம் வீட்டிலிருந்து சற்று தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி தனிமை விரும்பிகளுக்கு இந்த வீடு நிச்சயம் சொர்க்கபுரி என்கிறார்கள் வீட்டின் தற்போதைய உரிமையாளர்கள்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://www.behindwoods.com/bgm8/