இது முதலாளி காரா...? 'என்கிட்ட வச்சுக்கிட்டா என்ன ஆகும்னு காட்டுறேன்...' 'வேலையை விட்டு தூக்கியதால் ஊழியர் செய்த காரியம்... !

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | May 13, 2020 04:04 PM

அமெரிக்காவில் வேலை இழந்த ட்ராக் ஓட்டுநர் தனது முதலாளியின் விலை உயர்ந்த ஃபெராரி காரை அடித்து துவம்சம் செய்துள்ள செய்தி சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

US truck driver crushed his boss Ferrari car for lost job

உலகெங்கும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் தான். தற்போது வெளிவரும் ஆய்வுகளில் உலகெங்கும் சுமார் பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வேலை இழக்க கூடும் என்று அறிவிக்கின்றனர். அதனால் சிலர் மனதிற்குள் ஒரு அச்சத்துடனே தங்களின் அன்றாட வாழ்வை கழிக்கின்றனர். மேலும் இன்னும் கொரோனா அடங்காத காலகட்டத்திலேயே சிலர் தங்களின் வேலைகளை இழந்து வருகின்றனர். அப்படி வேலையிழத்த ஒருவர் செய்த செயல் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்து வரும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. அமெரிக்காவின் சிகாகோ நகரில் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட டிரக் ஓட்டுநரை அந்த நிறுவனம் வேலையை விட்டு நீக்கியது. வேலை இழந்த அதிர்ச்சியில் ஆத்திரமடைந்த அந்த ட்ரக் ஓட்டுநர் என்னிடம் வைத்து கொண்டால் என்ன ஆகும் என பார் என சவால் விட்டு, தனது நிறுவன முதலாளியின் ஃபெராரி ஜிடிசி4 லூஸோ ஸ்போர்ட்ஸ் கார் மீது ட்ரக்கைக் கொண்டு வந்து மோதி இடித்துத் தள்ளியுள்ளார்.

பல லட்சம் மதிப்புள்ள ஃபெராரி காரை சுக்குநூறாக்கிய ஊழியர் சமூகவலைத்தளங்களில் தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறார். மேலும் ஒரு சிலர் அவர் மீது குற்றம் சாட்டியும் வருகின்றனர். இவர் வேலை செய்த நிறுவனம் இவர்க்கு தர வேண்டிய அனைத்து சம்பள பாக்கியையும் கொடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், அந்த ஓட்டுநர் குறிப்பிட்ட அளவு வேலை செய்து முடித்தால் அவருக்கு ஒரு புதிய ட்ரக் தருவதாக அந்த நிறுவனம் சொல்லியிருந்ததாகவும், ஆனால் அவரால் அந்த அளவு வேலையை முடிக்க முடியவில்லை என்றும், புதிய ட்ரக் கிடைக்காத காரணத்தால் தான் அவர் இப்படி செய்துள்ளார் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

எது எப்படியோ நொறுங்கி போன ஃபெராரி கார் திரும்ப வர வாய்ப்பில்லை. மேலும் அதே கம்பனியில் இவருக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பில்லை என சமூகவலைத்தளங்களில் குறிப்பிடுகின்றனர்.