‘சூடான ராட்சஸ கிரகம் கண்டுபிடிப்பு...’ ‘இது சாதாரண நெருப்பு இல்ல...’ இரும்பு மழை பெய்துக் கொண்டிருப்பதாக தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Mar 12, 2020 07:21 PM

மிக அதிக வெப்பத்தை கொண்டிருக்கும் கிரகம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள்.

University of Geneva discovery of a hot planet that melts iron

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள், சிலி அட்டகாமா பாலைவனத்தில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் (ESO) உயர் தெளிவுத்திறன் நிறமாலை, எஸ்பிரஸ்ஸோவை( ESPRESSO) பயன்படுத்தி ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இது சூரிய மண்டலத்திற்கு வெளியே மிக தீவிரமான கிரகங்களின் காலநிலையைப் கண்டறிய சிறந்த வழிகளுக்கு வழிவகுக்கும் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது.

இந்த புதிய கிரகமானது  பூமியில் இருந்து 640 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது இந்த மாபெரும் எக்ஸோபிளானட் WASP-76b. இதன் வெப்பநிலை 2400 டிகிரி செல்சியஸுக்கு மேல்  இருக்கும். இது உலோகங்களை ஆவியாக்கும் அளவுக்கு உயர்ந்த வெப்பநிலை கொண்டது என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

மேலும் இந்த கிரகத்தில் ஒரு பகுதி மட்டுமே அதாவது பகல் பக்கத்தை  மட்டுமே காணமுடிவதாகவும், மேலும் இதை உருவாக்கிய நட்சத்திரத்திற்கு மட்டுமே காட்டுகிறது. அதன் குளிரான இரவு பக்கமானது பூமியின் சந்திரனைப் போல நிரந்தர இருளில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புதிய கிரகம் அதன்  நட்சத்திரங்களுக்கு மிக நெருக்கமாக உள்ளதாகவும்,  இது சூரியனிடம் இருந்து பெருவதை விட அதனை உருவாக்கிய நட்சத்திரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மடங்கு அதிக கதிர்வீச்சைப் பெறுவதாகவும் கூறியுள்ளனர். மேலும் இது அந்த நட்சத்திரத்தை சுற்றி வர  43 மணிநேரம் ஆகுமாம்.

இந்த கிரகத்தில் இரும்பு நீராவியை தீவிர வெப்பமான பகல் பக்கத்திலிருந்து குளிரான இரவு பக்கத்திற்கு கொண்டு வருகிறது, அங்கு வெப்பநிலை வெப்பநிலை 1500 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது  என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் தெரிவித்து உள்ளனர். இதன் ஒரு பக்கம் அதிக சூடாக இருப்பதால் மூலக்கூறுகள் அணுக்களாக பிரிக்கப்பட்டு இரும்பு போன்ற உலோகங்கள் வளிமண்டலத்தில் ஆவியாகின்றன. மேலும், பகல் மற்றும் இரவு பக்கங்களுக்கிடையேயான  தீவிர வெப்பநிலை வேறுபாடு நிலவுகிறது.  இது

மிக அதிக அளவில் வெப்பத்தை வெளியிடும் அதி-சூடான கிரகத்தில் முதல் முறையாக இரசாயன மாறுபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளது. இருப்பினும், விடியற்காலையில் இந்த இரும்பு நீராவியை நாங்கள் காணவில்லை. இந்த நிகழ்வுக்கு சாத்தியமான ஒரே விளக்கம் என்னவென்றால், இந்த எக்ஸோபிளேனட்டின் இருண்ட பக்கத்தில் இரும்பு மழை பெய்கிறது என சுவிட்சர்லாந்தின் ஜெனீவா பல்கலைக்கழகத்தின்  டேவிட் எரென்ரிச் கூறியுள்ளார்.

Tags : #PLANET #HOT