உலகின் ரொம்ப பாதுகாப்பான VAULT.. மொத்த மக்களையும் காப்பாத்த ஐநா போட்ட பிளான்.. பிரம்மிக்க வைக்கும் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Mar 01, 2023 03:51 PM

ஆர்டிக் பகுதியில் இருக்கும் பிரம்மாண்ட விதை சேமிப்பு கிடங்கில் கூடுதலாக விதைகளை நிபுணர்கள் வைத்திருக்கின்றனர். இதன்மூலம், உலக மக்களின் பசியினை போக்கிட முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.

The Doomsday Arctic seed vault gets 19500 new seeds now

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | வானத்தில் இருந்து கொட்டிய மீன் மழை.. அதிசயப்பட்டு போன மக்கள்.. அதுவும் பாலைவன பூமியில எப்படி?

ஆங்கிலத்தில் doomsday என்ற பதம் ஒன்று உண்டு. அதாவது உலகம் மிகப்பெரிய அழிவை சந்திக்கும் நாளை doomsday என்கிறார்கள். அப்படியான ஒரு மோசமான நாளுக்கு பிறகும் மனிதர்களை உயிர் வாழவைக்கவே இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புயல், பூகம்பம், காட்டுத்தீ என இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் இந்த கட்டிடத்துக்கு ஏதும் ஆகாது. ஏனென்றால் இதையெல்லாம் கணித்தே இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

வட துருவத்திலிருந்து 500 மைல் தொலைவில் உள்ள ஸ்வால்பார்ட் தீவுகளில் அமைந்துள்ளது இந்த வால்ட். இதற்குள் உலகின் இருக்கக்கூடிய அனைத்து பயர்களின் விதைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை உலகில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டு, பயிர்கள் அழிந்துபோனாலும் இங்கிருக்கும் விதைகளை கொண்டு மீண்டும் உணவு உற்பத்தியை துவங்கலாம். இந்த இடம் அமைந்துள்ள தீவுகளில் 15 சதவீதம் மட்டுமே தாவரங்கள் வளர்கின்றன. கிட்டத்தட்ட முழுவதும் பனியால் சூழப்பட்ட தீவு இது.

The Doomsday Arctic seed vault gets 19500 new seeds now

Images are subject to © copyright to their respective owners.

கலபகோஸ் காட்டு தக்காளி முதல் பூர்வீக அமெரிக்க பழங்குடியினரால் பயிரிடப்படும் பூசணிக்காய்கள் வரை இந்த பதுங்கு குழிக்குள் விதைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த பதுங்கு குழிக்குள் மக்களுக்கு அனுமதி கிடையாது. இதனுள் விதைகள் மூன்று அடுக்கு ஃபாயில் பேக்கேஜிங்கில் வைக்கப்பட்டு பெட்டிகளில் சேமிக்கப்படும். இந்த வால்ட்டின் உள்ளே -18C வெப்பநிலையில் விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

The Doomsday Arctic seed vault gets 19500 new seeds now

Images are subject to © copyright to their respective owners.

இங்கு 1.1 மில்லியன் வகையான விதைகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது மேலும், 19,500 வகையான விதைகளை இதனுள் வைத்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுடன் துணையுடன் இந்த விதைகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், இந்த வால்ட்டில் உள்ள மொத்த விதைகளின் எண்ணிக்கை 1.2 மில்லியனாக உயர்ந்துள்ளது.

The Doomsday Arctic seed vault gets 19500 new seeds now

Images are subject to © copyright to their respective owners.

இதுபற்றி பேசியுள்ள நார்வேயின் விவசாயம் மற்றும் உணவு அமைச்சர் சாண்ட்ரா போர்ச் ,"உலகின் மரபணு வங்கிகளில் பராமரிக்கப்படும் பயிர்களின் மரபணு பன்முகத்தன்மையை ஒட்டுமொத்த மனிதகுலமும் நம்பியுள்ளது. மேலும், அந்த பன்முகத்தன்மையை பாதுகாக்கவே இந்த பிரம்மாண்ட வால்ட் உருவாக்கப்பட்டது" என்றார்.

The Doomsday Arctic seed vault gets 19500 new seeds now

Images are subject to © copyright to their respective owners.

ஆண்டுக்கு 3 முறை மட்டுமே பராமரிப்பு காரணங்களுக்காக இந்த வால்ட் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த வால்ட் உள்ளே மெய்நிகர் சுற்றுலா செல்லும் வாய்ப்பு சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்குபெற்று இந்த வால்ட்டை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Also Read | இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி.. வானத்தில் பறக்கும் வீரர்கள்.. சல்யூட் அடிக்க வைக்கும்  வீடியோ..!

Tags : #DOOMSDAY ARCTIC SEED VAULT #NEW SEEDS

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The Doomsday Arctic seed vault gets 19500 new seeds now | World News.