VIDEO: 8-வது மாடியில் 80 அடி உயரத்தில்... 'ஊஞ்சல்' ஆடிய குழந்தை... பதறவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | May 20, 2020 08:36 PM

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ என்ற பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியிலுள்ள ஒருவர் தனது குழந்தையை வீட்டின் பால்கனியில் வைத்து ஊஞ்சல் ஆட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளது.

Terrifying video of Child swing in 8 th floor above 80 ft

வீடியோவில், அந்த நபர் குழந்தையை வைத்துக் கொண்டு மிக வேகமாக அந்த ஊஞ்சலை ஆட்டுகிறார். அந்த குழந்தையும் பால்கனியின் விளிம்பு வரை சென்று வருகிறது. இதனை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த ஒருவர், இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சிகரமான விடீயோவிற்கு நெட்டிசன்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. சுமார் 80  அடி உயரத்தில் வேகமாக ஊஞ்சலை ஆட்டுவதன் மூலம் அதற்கான அபாயத்தை உணராமல் பொறுப்பற்ற முறையில் அந்த நபர் ஊஞ்சலை ஆடியது உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு மக்களின் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் காரணத்தால் இப்படியா குழந்தைகளில் நேரத்தை கழிப்பது எனவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.