மேகத்துல பட்டு தெறித்த பிரம்மாண்ட கடல் அலை.. உண்மையை உடைத்த ஆராய்ச்சியாளர்கள்..வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரம்மாண்டமாக எழுந்த கடல் அலை ஒன்று மேகத்தில் பட்டு சிதறும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடல்
உலகின் முக்கால்வாசி பகுதி கடலால் சூழப்பட்டிருக்கிறது. இருப்பினும் மனிதர்களுக்கு கடல் மீது கொண்ட காதல் மட்டும் குறைவதே இல்லை. அதன் காரணமாகவே கடல், கடற்கரை, கடலலை ஆகியவற்றை விதவிதமாக வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகின்றனர் மக்கள். அப்படி பிரமாண்ட அலை ஒன்று மேகத்தில் பட்டு தெறிக்கும் வீடியோ ஒன்றினை சோசியல் மீடியாவில் ஒருவர் பகிர, அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
மேகத்தை உரசிய கடல் அலை
இந்த வீடியோவில் அதி உயரமாக எழும் கடல் அலை ஒன்று, மேகத்தில் உரசுகிறது. இதனால் மேகம் கலைந்து செல்வது பார்க்கவே பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. உண்மையில் கடல் அலை மேகத்தில் உரசியதா? அல்லது ஏதேனும் எடிட் செய்பவர்களின் வேலையா? என கேள்விகள் எழுந்த நிலையில் இந்த வீடியோ உண்மையானது தான் எனவும் அதில் உள்ள மேகங்கள் உண்மையானவை இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
போலி மேகங்கள்
இந்த கடலலை உரசியது மேகம் இல்லை என்றால் அது என்ன? என்ற கேள்விக்கு பதில் சொல்லும் ஆய்வாளர்கள், அது sea aerosol (SSA) என்கின்றனர். அதாவது, கடல்நீர் ஆவியாகி, கடல் பரப்புக்கு சற்றே உயரத்தில் அடர்த்தியான மேகங்கள் போல காட்சியளிக்கும். இதில் உப்புகள் கலந்திருக்கும்.
பிரம்மாண்ட கடல் அலை இப்படியான sea aerosol-ல் பட்டு சிதறியது தான் இந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. சூரியனில் இருந்துவரும் கதிர்வீச்சை இந்த SSA துகள்கள் சிதறடிக்கின்றன. கடல்வாழ் உயிரினங்களுக்கு இது ஒரு பாதுகாப்பு கேடயமாக செயல்படுகிறது.
மேகத்தில் பட்டு தெறிக்கும் இந்த வீடியோவை இதுவரையில் 7.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஆரம்பத்தில் இது போலியான வீடியோ என்று நம்பியவர்களும், தற்போது ஆய்வாளர்கள் இந்த அரிய நிகழ்வுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை வெளியிட்ட பின்னர் திகைப்படைந்து உள்ளனர்.
Perfect wave touching the clouds.. pic.twitter.com/93RsgS3YvC
— Buitengebieden (@buitengebieden) May 3, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8