"ஐயையோ இறக்கி விட்ருங்க சார்"..தலைகீழாக கதறிய பயணிகள்..பகீர் கிளப்பிய FUN RIDE..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க் ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக Fun Ride சென்ற மக்கள் தலைகீழாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக அம்யூஸ்மென்ட் பார்க் செல்பவர்களுக்கு இந்த பயம் வரும். சுற்றி, வளைத்து, ஆகாயத்தில் பாய்ந்தபடி செல்லும் வாகனங்கள் பாதியில் நின்றுவிடுமோ என்ற அச்சத்தை அடக்கிக்கொண்டபடி தான் பலரும் சாகச பயணத்திற்கு செல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள கென்னிவுட் அம்யூஸ்மென்ட் பார்க்குக்கு கடந்த திங்கட்கிழமை சென்றவர்களுக்கும் இந்த அச்சம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் பயந்தபடியே நடந்ததை தான் அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
அம்யூஸ்மென்ட் பார்க்
அமெரிக்காவின் மேற்கு பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ளது கென்னிவுட் அம்யூஸ்மென்ட் பார்க். இங்கே கடந்த திங்கட்கிழமை நடந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. வழக்கம்போல, கென்னிவுட் பார்க்கில் உள்ள ஏரோ 360 ரைடில் ஏற அன்றும் மக்கள் போட்டிபோட்டுள்ளனர். குஷியாக துவங்கிய அந்தப் பயணம் அப்படி முடிவடையவில்லை.
பயணிகளுடன் வானத்தை நோக்கி மேலெழும்பிய ராட்சச இருக்கை, அப்படியே நின்றுவிட்டது. அதுவும் மக்கள் தலைகீழாக தொங்கிய நிலையில் இருந்தபோது இயந்திரம் நின்றுவிட்டது. இதனால் அதில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்திருக்கிறார்கள். பயம் காரணமாக மக்கள் கூச்சலிட, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் சிறிது நேரத்தில் அது சரிசெய்யப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. நிபுணர்கள் ஓடிவந்து சிக்கலை சரிசெய்ய, பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
அனைவரும் நலம்
பாதியிலேயே இயந்திரம் நின்றதால் பயணிகள் தலைகீழாக தொங்கியது அங்கு வந்திருந்தவர்களை திடுக்கிட வைத்திருக்கிறது. இருப்பினும் அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக பார்க் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்துப் பேசிய பார்க் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர்," இயந்திரம் நின்றவுடனேயே மக்கள் பத்திரமாக கீழே தரையிறக்கப்பட்டனர். யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. மக்களின் பாதுகாப்பே எங்களது பிரதான கொள்கை. இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து முழுமையான விசாரணை நடைபெற்றபிறகே மீண்டும் அது பயன்படுத்தப்படும்" என்றார்.
அமெரிக்காவில் உள்ள அம்யூஸ்மென்ட் பார்க்கில் Fun Ride சென்ற பயணிகள், இயந்திரம் பழுதானதால் தலைகீழாக தொங்கிய சம்பவம் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | "என்ன 500ரூபா நோட்டு வித்தியாசமா இருக்கு?".. கடைக்காரருக்கு வந்த சந்தேகம்.. வசமாக சிக்கிய பலே திருடன்..!
