இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு ‘பெண்’ குழந்தை பிறப்பு.. குழந்தைக்கு ‘பெயர்’ என்ன தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
![Prince Harry and Meghan announced birth of baby girl Prince Harry and Meghan announced birth of baby girl](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/prince-harry-and-meghan-announced-birth-of-baby-girl.jpg)
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இரண்டாவது மகன் பீட்டர் ஹாரி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மார்க்ல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து வந்தனர். அப்போது அரச குடும்பத்தினருடன் ஹாரி-மேகன் தம்பதிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது.
இதனால் அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறி தனது மனைவியுடன் ஹாரி அமெரிக்கா சென்றுவிட்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆர்ச்சி ஹாரிசன் மவுன்ட்பேட்டன் என பெயர் வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி ஹாரி-மேகன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு லிலிபெட் லிலி டயானா என பெயர் சூட்டியுள்ளனர். இதில் குழந்தையின் முதல் பெயரான ‘லிலிபெட்’ என்பது இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் புனைப்பெயர். ‘டயானா’ என்பது ஹாரியின் தாயார் பெயர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக அவர்களுடைய பத்திரிகை செயலாளர் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)