மும்முரமாக பேசிய போப்.. ஆர்வமா பக்கத்துல போன "குட்டி விருந்தாளி".. சுத்தி இருந்தவங்களுக்கு சர்ப்ரைஸ்..!
முகப்பு > செய்திகள் > உலகம்வாடிகனில் போப் பிரான்சிஸ் உரையாற்றிக்கொண்டிருந்த போது சிறுவன் ஒருவன் அவர் அருகே செல்ல, சுற்றி இருந்த அனைவரும் ஒருகணம் திகைத்துப்போயிருக்கிறார்கள்.
சொற்பொழிவு
கத்தோலிக்க திருச்சபையின் மையமாக கருதப்படும் வாடிகனில் நேற்று போப் பிரான்சிஸ் வழக்கம்போல தனது சொற்பொழிவில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவருடைய கருத்துக்களை கேட்க ஏராளமான மக்கள் அங்கே கூடியிருந்தனர். அப்போது, சிறுவன் ஒருவன் போப்பின் அருகே செல்ல பார்வையாளர்கள் அனைவரும் ஒருகணம் திகைத்துப்போய்விட்டார்கள். தனது பேச்சில் கவனமாக இருந்த போப் சிறுவன் அருகில் வந்த பின்னரே அவனை கண்டுகொண்டார்.
அப்போது சிறுவனின் தலையை கோதிவிட்டுக்கொண்டே அவனிடம் போப் பேசிக்கொண்டிருந்தார். அதன்பிறகு அங்கிருந்த பணியாளர் ஒருவருக்கு போப் சைகை செய்ய அவர் சாக்லேட் எடுத்துவந்து கொடுத்தார். அதை போப் சிறுவனுக்கு வழங்கினார். அதனை தொடர்ந்து தனது பிரசங்கத்தை தொடர்ந்தார். பணியாளர்கள் யாரும் சிறுவனை அப்புறப்படுத்த முயற்சிக்கவில்லை. அதே நேரத்தில் சிறுவனும் சமர்த்து பிள்ளையாக போப் அருகே வெகுநேரம் நின்றிருந்தான். இது அங்கிருந்தவர்கள் நெகிழ செய்தது.
உரையாடல்
தன்னிடம் ஓடிவந்த சிறுவனிடம் போப்," உன்னுடைய பெயர் என்ன? நீ எங்கிருந்து வருகிறாய்? உனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? ஏதும் அசவுகரியம் இருக்கிறதா? உனக்கு பிடித்தபடி இருந்துகொள்" என இத்தாலி மொழியில் பேசியிருக்கிறார். அதற்கு சிறுவனும் மழலை மொழியில் பதில் கூறியதாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து கூடியிருந்தவர்களை நோக்கி பேசிய போப்,"நாம் வயதானவர்களுக்கும் சிறியவர்களுக்கும் இடையிலான உரையாடலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். இவர் தைரியமானவர். அவர் இங்கே அமைதியாக இருக்கிறார்" என சிறுவனை சுட்டிக்காட்டியபடி கூறினார். இதனால் அனைவரும் புன்னகை செய்தனர்.
கூட்டணி
தொடர்ந்து பேசிய போப்," கூட்டணி எப்போதும் முக்கியமானது. குறிப்பாக குடும்பங்களில். வயதானவர்களுக்கும் சிறுவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் குடும்பத்தை காப்பாற்றும் வல்லமை கொண்டது. அதேவேளையில், இந்த உரையாடல் வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையில் நடக்கவில்லை என்றால், எதிர்காலத்தை தெளிவாகக் காண முடியாது" என்றார். போப் தனது உரையை நிகழ்த்தும்போது அந்த சிறுவனும் அதனை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தான். இது பலரையும் வியப்படைய செய்தது.
Also Read | "End-ஏ கிடையாது".. இந்தியாவின் நீளமான ரயில்.. வீடியோவை பகிர்ந்து ஆனந்த் மஹிந்திரா போட்ட வைரல் Caption..!