'பையன் கிட்ட இருந்து டெய்லி போன் வரும்'... 'ஆனா இந்த தடவ கம்பெனியில் இருந்து வந்த டெலிபோன் அழைப்பு'... நொறுங்கி போன மொத்த குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 03, 2020 02:29 PM

படித்த படிப்பிற்கான சரியான வேலை கிடைக்காமலும், வீட்டில் நிலவும் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் பல இளைஞர்கள் படிப்பை முடித்த உடன் வெளிநாட்டிற்கு வேலைக்காகச் செல்கிறார்கள். அப்படி வேலைக்குச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோக சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tirunelveli young man dies under mysterious circumstances in Japan

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா விஜயநாராயணம் அருகே உள்ள ஆனிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது கடைசி மகன் மாதவன். இவர் எலக்ட்ரிகல் பிரிவில் டிப்ளமோ பட்டம் பெற்றார். இதையடுத்து வேலைக்குச் செல்ல முயன்று கொண்டிருந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் ஜப்பானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தில் அவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

கடல் கடந்து சென்று வேலை செய்து வரும் மாதவன், தினமும் பெற்றோருக்கு போன் செய்து பேசுவது வழக்கம். ஆனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாதவன் வேலை செய்த நிறுவனத்திலிருந்து ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அந்த ஒரு அழைப்பு அவர்கள் குடும்பத்தை மொத்தமாக உலுக்கி எடுத்து விட்டது. அதில் பேசிய அதிகாரிகள், உங்கள் மகன் மாதவன் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்கள். ஆசையாக வளர்ந்த கடைசி மகன் இறந்த செய்தி மாதவனின் பெற்றோரை நொறுங்கச் செய்தது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து மாதவனின் சகோதரர் கூறுகையில், “எனது தம்பி போனில் தொடர்பு கொண்டு நல்ல முறையில் தான் பேசி வந்தார். ஆனால் அவன் வேலைப்பார்த்து வந்த நிறுவனம் மூலம் மாதவன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அவனது இறப்பில் மர்மம் உள்ளது. எனவே தமிழக அரசு இந்தியத் தூதரக மூலம் எனது தம்பி இறப்பு குறித்து உண்மை நிலையை விசாரித்து மாதவனின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tirunelveli young man dies under mysterious circumstances in Japan | Tamil Nadu News.