'அபார்ஷன் பண்றது இனிமேல் தப்பு இல்ல...' இது ஒரு சுகாதார பிரச்சனை மட்டும்தான்...' பெண்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதால் புதிய சட்டம் இயற்றிய நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்பல வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு ஒரு குற்ற செயலாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் நியூசிலாந்து அரசு கருக்கலைப்பு குற்றம் இல்லை என்னும் சட்டத்தை இயற்றியுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் 1977-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் மூலம் கருக்கலைப்பு என்பது ஒரு குற்ற செயலாக கருதவேண்டும் என்ற நடைமுறை இருந்தது. ஒரு சில மருத்துவ விதிவிலக்குகளை தவிர, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, கருக்கலைப்பு என்பது நியூசிலாந்தில் ஒரு குற்றமாகக் கருதப்படுவது மருத்துவ முறையாகும்.
தற்போது அந்த நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் பிரிவை நீக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்தது.
இந்த பிரச்சனையானது, பெண்களின் உளவியல் பிரச்சனையாக பார்க்கப்பட்டு, கருக்கலைப்பு குற்றம் இல்லை என்ற சட்டம் இயற்றப்பட்டதாகவும், இந்த மசோதாவிற்கு எம்.பி.க்கள் கட்சி அடிப்படையில் வாக்களிக்க வேண்டியதில்லை என்று நியூசிலாந்து அரசு தெரிவித்திருந்தது. இதை அடுத்து, இந்த நடைமுறைக்கான மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 68 ஓட்டுகளும், எதிராக 51 ஓட்டுகளும் விழுந்தன. இதனால் மசோதா நிறைவேறியது.
மேலும் கருக்கலைப்பு குற்றம் அல்ல, ஒரு சுகாதார பிரச்சினையாக மட்டுமே கருதப்படும் என நியூசிலாந்து நீதித்துறை மந்திரி ஆண்ட்ரூ லிட்டில் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.
