மார்ச் 4-ஆம் தேதி கண்டிப்பா சம்பவம் இருக்கு.. கிட்ட நெருங்கிடுச்சு.. நாசா வெளியிட்ட முக்கிய தகவல்
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஏவுகணை ஒன்று வரும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி நிலாவில் மோதவிருப்பதாக தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி பதஞ்சலி இணைந்து அறிமுகம் செய்துள்ள ரூபே கிரெடிட் கார்டு.. என்னெல்லாம் சலுகைகள்?
பால்கன்-9:
கடந்த 2015ஆம் ஆண்டு எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் சார்பில் காலநிலை கண்காணிப்பு செயற்கை கோள் ஒன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவப்பட்ட நிலையில் செயற்கை கொள்ளை சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்திய பிறகு சில தொழில்நுட்ப காரணங்களால் ராக்கெட் பூமிக்கு திரும்ப முடியாமல் போனது.
நிலவில் மோதும் என நாசா:
மேலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அந்த ஏவுகணையை அப்படியே விண்வெளியியே விட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்த ராக்கெட்டின் ஒரு பகுதி வருகிற மார்ச் மாதம் 4-ஆம் தேதி நிலவில் மோதும் என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த பால்கன்-9:
இதற்கு முன் நாசாவின் நிதியுதவி பெற்ற விண்வெளி திட்டங்களில் பணியாற்றி வரும் விண்வெளி ஆய்வாளரான பில் க்ரே இதனை குறிப்பிட்டிருந்தார். கட்டுப்பாட்டை இழந்த பால்கன்-9 ராக்கெட் பூமியும், நிலவையும் சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பூஸ்டர் என்று அழைக்கப்படும் ராக்கெட்டின் முன்பக்கம் நிலவில் மோத இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
9 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி வெடிக்கக் கூடும்:
அதுமட்டுமில்லாமல் இந்த ராக்கெட் நிலவை நெருங்கிவிட்டதாகவும், மார்ச் மாதம் 4-ம் தேதி நிலவில் மணிக்கு 9 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதி வெடிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கணிப்பு மட்டும் நடந்தால், ஒரு ராக்கெட் நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நிலவில் மோதுவது இது முதல்முறை அல்ல:
வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சுமார் 4 டன் எடையுள்ள பூஸ்டர், நிலவினை நோக்கி மணிக்கு 9,290 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கொண்டிருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் ராக்கெட்டின் உதிரிபாகங்கள் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் நிலவில் மோதுவது இது முதல்முறை அல்ல என்று கூறியுள்ள நாசா, பால்கன்-9 ராக்கெட் மோதுவதால் பெரும் விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.