பஞ்சாப் நேஷனல் வங்கி பதஞ்சலி இணைந்து அறிமுகம் செய்துள்ள ரூபே கிரெடிட் கார்டு.. என்னெல்லாம் சலுகைகள்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 01, 2022 06:56 PM

பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனமும் இணைந்து 2 வகையான ரூபே கடன் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

pnb Patanjali Ayurveda in association 2 Rupay credit card

பஸ் ஸ்டான்ட் டாய்லெட் உள்ளே நுழைந்தபோது.. அங்கு இருந்ததைக் கண்டு ஷாக் ஆன பொதுமக்கள்.. இதெல்லாம் எப்படி இங்க வந்துச்சு?

பிஎன்பி ரூபே பிளாட்டினம் மற்றும் பிஎன்பி ரூபே செலக்ட்:

இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (என்பிசிஐ) துணையுடன் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனமும் இணைந்து பிஎன்பி ரூபே பிளாட்டினம், பிஎன்பி ரூபே செலக்ட் என்ற இரு வகைகளில் கடன் அட்டைகள் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.50 உச்சவரம்புடன் 2 சதவீத கேஷ்பேக்:

இந்த நிலையில் பதஞ்சலி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், லாயல்டி புள்ளிகள், காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பதஞ்சலி ஸ்டோர்களில்ரூ.2,500-க்குமேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு ரூ.50 உச்சவரம்புடன் 2 சதவீத கேஷ்பேக் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pnb Patanjali Ayurveda in association 2 Rupay credit card

சர்வதேச விமான நிலையங்களில் பயன்படுத்த முடியுமா?

அதுமட்டுமில்லாமல், இந்த இரு வகையான கடன் அட்டைகளையும் வாங்கும்போதே 300 ரிவார்டு புள்ளிகளும் கிடைக்குமாம். மேலும், உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களிலும் ரூபே பிளாட்டினம், பிஎன்பி ரூபே செலக்ட் என்ற இரு வகைகளில் கடன் அட்டைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிஎன்பி ஜீனி செயலி மூலம் கடன் அட்டையை நிர்வகிக்க முடியும் எனவும், வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப ரிவார்டு புள்ளிகள், சுலபத் தவணை வசதி, தானாகப் பணம் செலுத்தும் வசதி ஆகியவையும் கூடுதல் வசதியாகக் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பிளாட்டினம் அட்டையை இலவசம்:

அதோடு, வாடிக்கையாளர்கள் விபத்தில் இறப்பு மற்றும் தனிப்பட்ட முழு ஊனம் ஏற்பட்டால் பிளாட்டினம் அட்டைதாரர்களுக்கு ரூ.2 லட்சம், செலக்ட் அட்டைதாரர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையாகவும் அளிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பிளாட்டினம் அட்டையை இலவசமாகப் பெறலாம்.

pnb Patanjali Ayurveda in association 2 Rupay credit card

அதற்கு ஆண்டு கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். செலக்ட் அட்டை பெற ரூ.500 கட்டணம், ஆண்டு கட்டணம் ரூ.750. முந்தையஆண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் ஒருமுறையாவது அட்டையைப் பயன்படுத்தினால், ஆண்டுக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் கூறியுள்ளனர்.

மனைவியின் ஆவி புகுந்ததா? மனைவி குரலில் கணவன் சொன்ன விஷயம்.. கடைசியில் கிணற்றுக்குள் காத்திருந்த அதிர்ச்சி

Tags : #PATANJALI AYURVEDA #RUPAY CREDIT CARD #பஞ்சாப் நேஷனல் வங்கி #பதஞ்சலி ஆயுர்வேதா

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Pnb Patanjali Ayurveda in association 2 Rupay credit card | India News.