இதுக்கு ஒரு முடிவே இல்லையா...! 'இது 5-வது தடவ...' 'இப்போ எந்த நாட்டுல...? - தொடர்ந்து உருவாகும் 'மர்ம' தூண்கள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் பாலைவனத்தில் தென்பட்ட உலோகத் தூண் மீண்டும் போலந்தின் விஸ்டுலா நதிக்கரையோரமும் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ருமேனியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைப் போல போலந்திலும் மர்ம உலோகத் தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் உடா பாலைவனத்தில் உலோகத் தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் திடீரென அத்தூண் மாயமாகியுள்ளது. அதையடுத்து பிரிட்டன், ருமேனியா, நெதர்லாந்திலும் இதுபோன்ற உலோக தூண் திடீரென உருவாகியுள்ளது.
இந்நிலையில் போலந்தின் வார்சாவிலுள்ள விஸ்டுலா நதிக்கரையோரம் மணல் பரப்பில் 10 அடி உயர தூணை நடைபயிற்சியில் ஈடுபட்டோர் கண்டுள்ளனர். அந்த தூணை வைத்ததும் யார் என இதுவரை தெரியவில்லை, இந்த நிகழ்விற்கு வேற்றுகிரக வாசிகளுக்கு தொடர்பிருக்குமோ என விவாதமும் எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்
