"உங்களுக்கு நோபல் பரிசு அறிவிச்சிருக்காங்க".. கொண்டாடிய பணியாளர்கள்.. விஷயத்தை கேட்டதும் ஆராய்ச்சியாளர் கொடுத்த ரியாக்ஷன்.. CUTE வீடியோ.!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றிருக்கும் மோர்டன் மெல்டல் பரிசு குறித்த அறிவிப்பை கேள்விப்பட்டதும் கொடுத்த ரியாக்ஷன் பலரையும் ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நோபல் பரிசு
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் ஆகிய பிரிவுகளின் கீழ் நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக 3ம் தேதி அன்று மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஸ்வான்டே பாபோ என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மனித பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்விற்காக ஸ்வான்டே பாபோவிற்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, நேற்று முன்தினம் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனை பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கர் ஆகியோர் பெறுகின்றனர். போட்டான் எண்டாங்கிள்மெண்ட் குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் அறிவிக்கப்பட்டது.
வேதியியலுக்கான நோபல் பரிசு
இதனிடையே நேற்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி,டென்மார்க்கின் மார்டென் மெல்டால் ஆகிய மூன்று பேர் இந்த விருதை பெறுகிறார்கள். கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரி குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு எல் அகுபேஷன் (L'occupation) என்ற புத்தகத்தை எழுதியதற்காக பிரான்ஸை சேர்ந்த எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ
இந்நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவர்களில் ஒருவரான மார்டென் மெல்டால் தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்ததும் மகிழ்ச்சிபொங்க அதனை தனது சக ஆராய்ச்சியாளர்களுடன் கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், அலுவலகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் மார்டென் மெல்டால்க்கு தங்களது பாராட்டுகளை தெரிவிக்கின்றனர். அதனை சிரித்த முகத்துடன் அவர் ஏற்றுக்கொள்ளும் வீடியோ பலரையும் ஈர்த்திருக்கிறது.
First celebration! @ChemKUniversity @UCPH_Research @NobelPrize pic.twitter.com/pQAytyP3U2
— Jiwoong Lee (@TheLeeLab_Chem) October 5, 2022
Also Read | T20 போட்டியில் இரட்டை சதம்.. கிரவுண்ட்ல வெஸ்ட் இண்டீஸ் வீரர் காட்டிய வானவேடிக்கை.. மிரண்டு போன ஆடியன்ஸ்..!