"இந்த டீம் தான் ஜெயிக்கும்".. பெட் கட்டிய 71 வயது தாத்தா.. அடிச்சது பாருங்க மெகா ஜாக்பாட்.. வரலாற்றுலயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லயாம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த 71 வயதான தொழிலதிபர் ஒருவர் பேஸ்பால் போட்டியில் பெட் கட்டி இமாலய பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். இதுவரையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது கிடையாது என்கிறார்கள் அதிகாரிகள்.

நம் நாட்டில் கிரிக்கெட் போல, அமெரிக்காவில் பிரபலமானது பேஸ்பால் போட்டிகள். இதனை காண எப்போதுமே மக்களிடத்தில் ஒரு தீரா ஆர்வம் இருந்துவருகிறது. இதனிடையே, சமீபத்தில் அமெரிக்காவில் பேஸ்பால் World Series நடைபெற்றது. வழக்கமான போட்டிகளுக்கே கூட்டம் அலைமோதும் எனும்போது World Series என்றால் சொல்லவா வேண்டும்?. ஆனால், இந்த தொடரை தனக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த ஜிம் மெக்வேல் எனும் தொழிலதிபர்.
தற்போது 71 வயதாகும் ஜிம் மெக்வேலை Mattress Mack என்றும் அழைக்கிறார்கள். பர்னிச்சர் பொருட்களின் விற்பனையகத்தை நடத்திவரும் ஜிம் மெக்வேல், டெக்சாஸை சேர்ந்த பிரபல பேஸ்பால் அணியான ஹூஸ்டன் ஆஸ்ட்ரோஸ் (Houston Astros) அணியின் மிகத் தீவிரமான ரசிகர். இவர் World Series -ஐ முன்னிட்டு தனக்கு பிடித்த அணியான ஹூஸ்டன் ஆஸ்ட்ரோஸ் இந்த தொடரில் வெற்றிபெறும் என 10 மில்லியன் அமெரிக்க டாலரை பெட் கட்டியிருக்கிறார்.
முதலில், 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெட் கட்டியிருந்த அவர், அதன்பிறகு 7 மில்லியன் டாலரை பெட்டாக கட்டியிருக்கிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் Philadelphia Phillies அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது ஹூஸ்டன் ஆஸ்ட்ரோஸ் அணி. இதனால் அந்த அணி வெற்றிபெறும் என பெட் கட்டியிருந்த ஜிம் மெக்வேலுக்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 600 கோடி ரூபாய்) பரிசாக கிடைத்திருக்கிறது.
அமெரிக்க பேஸ்பால் பெட்டிங் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை இதுவரை யாருமே வென்றதில்லை என்கிறார்கள் உள்ளூர் அதிகாரிகள். டெக்ஸாஸ் மாகாணத்தில் பெட்டிங்கிற்கு தடை இருப்பதால், லூசியானா மாகாணத்திற்கு சென்று தன்னுடைய விருப்பமான ஹூஸ்டன் ஆஸ்ட்ரோஸ் அணிக்காக பெட் கட்டியிருக்கிறார் ஜிம். அதுவே அவருக்கு இமாலய பரிசை பெற்றுக்கொடுத்திருக்கிறது.
Also Read | சிவ பூஜைகளில் தவறாமல் கலந்துகொள்ளும் கால பைரவர்.. பரவசத்துடன் பார்த்துச்செல்லும் பக்தர்கள்.. வீடியோ..!

மற்ற செய்திகள்
