“இப்படி எல்லாம் கூடவா யோசிப்பாங்க...?” - பணத்தை எடுத்துட்டு ஓட... அந்த மோசமான காரியத்த செய்த ஊழியர்... ஐடியாவை கண்டு பீதியில் 'உறைந்த முதலாளி'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்தன்னிடம் இருந்த பணத்தை திருடிச் செல்ல வேண்டி, ஊழியர் ஒருவர் போட்ட திட்டத்தை அறிந்த முதலாளி, ஒரு நிமிடம் நிச்சியம் உறைந்தே போயிருப்பார். அப்படி என்ன திட்டம் என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
துருக்கி நாட்டின் அடானா என்னும் பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம் உன்வெர்தி (Ibrahim Unverdi). கார் டீலர் உரிமையாளரான இவர், தன்னிடம் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர் மீது அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், கார் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 215,000 டர்கிஷ் லிரா (இந்திய மதிப்பில் சுமார் 22 லட்ச ரூபாய்) பணத்தை, இப்ராஹிம் தன்னுடைய ஊழியரிடம் கொடுத்து அதனை அலுவகத்தில் கொண்டு வைக்குமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த ஊழியர் அலுவலகம் சென்று பணத்தை பத்திரமாக வைத்து விட்டாரா என்பதை அறிந்து கொள்ள, இப்ராஹிம் தொடர்ந்து தனது ஊழியரை அழைத்துள்ளார்.
ஆனால், அந்த ஊழியர் அழைப்பை எடுக்கவில்லை. மறுநாள் இப்ராஹிமை அழைத்த ஊழியர், தனக்கு பணத்தின் தேவை உள்ளது என்றும், அதிக கடன்பட்டு மாட்டியுள்ளதால், நீங்கள் கொடுத்த பணத்தை திருடிச் சென்று விட்டேன் என்றும் கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல், பணத்தை திருடிக் கொண்டு போவதற்கு முன்னர், இப்ராஹிம் குடிக்க இருந்த பானத்திற்குள், கொரோனா நோயாளி ஒருவரின் எச்சிலைக் கலந்து வைத்து, அவருக்கு நோய் வாய் ஏற்பட்டு கொலை செய்யவும் திட்டம் தீட்டிச் சென்றுள்ளார். இதற்காக, கொரோனா நோயாளி ஒருவரின் எச்சிலை அந்த ஊழியர் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த பானத்தை இப்ராஹிம் குடிக்கவேயில்லை. அது மட்டுமில்லாமல், அந்த ஊழியர் இப்ராஹிமிற்கு அனுப்பியுள்ள மெசேஜ் ஒன்று, மேலும் பீதியை இப்ராஹிமிடம் உருவாக்கியுள்ளது. 'வைரஸால் உன்னை கொள்ள முடியவில்லை. அடுத்த முறை உன்னை தலையில் சுட்டுக் கொல்வேன்' என மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனைக் கண்டு பதறிய இப்ராஹிமின் வீட்டிற்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய இப்ராஹிம், 'இப்படி ஒரு வினோதமான முறையில் கொலை செய்யும் நோக்கை நான் எங்கும் கேள்விப்பட்டதில்லை. எனக்கு நோய் ஏற்படாமல் தடுத்ததற்காக, இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் தலையில் சுட்டுத் தள்ளுவதாக, அவர் கூறியதை போல செய்தால் நான் மட்டும் தான் பாதிக்கப்படுவேன். ஆனால், வைரஸ் மூலம் என்னை தாக்க நினைத்தால், அது என் குடும்பத்தினரையும் பாதிக்கும். எனது பெற்றோர்களுக்கு நிறைய நோய் உள்ளது. ஒரு வழியாக நானும், எனது குடும்பத்தினரும் தப்பித்து விட்டோம்' என இபர்ஹிம் கூறியுள்ளார்.
சம்மந்தப்பட்ட ஊழியர் மீது கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தும் வகையிலான நடத்தையில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.