இவ்வளவு நாளா 'மனுஷங்க' கண்ணுல படாம இருந்த இடம்...! 'கூகுள் மேப் காட்டி கொடுத்துடுச்சு...' 'கடலுக்கு நடுவுல இருந்த பிளாக் ஹோல்...' - ஆய்வுக்கு பின் தெரிய வந்த உண்மை...!
முகப்பு > செய்திகள் > உலகம்சில மாதங்களுக்கு முன்பு பசிபிக் பெருங்கடலில் பெரிய கருந்துளை இருப்பதாக கூகுள் மேப் மூலம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது.
மனிதர்கள் வாழும் இந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போது ஏற்பட்டு வரும் புவியியல் மாற்றங்கள் இன்னும் 100 வருடங்களுக்குள் உலகம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு பல மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என அடிக்கடி சூழலியல் விஞ்ஞானிகளால் எச்சரிக்கைப்பட்டு வருகிறது.
பல நாடுகளில் மனித செயல்பாடுகளால் கடல் நீர் உட்புகுவதும், மரங்கள் அழிக்கப்படுவதும், கார்பன் அளவு அதிகரிப்பதும் என உலகை அழிக்கமுடிந்த அனைத்து செயல்பாடுகளையும் மனிதர்கள் கண்டுபிடிப்பு, நவீன வாழ்க்கை என்கின்ற பெயரில் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் கூகுள் மேப் மூலம் பசிபிக் பெருங்கடலில் ஒரு கருந்துளை உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 1820-ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த கடலோடிகள், டஹிட்டி என்ற இடத்தின் அருகில் தீவு ஒன்றினைக் கண்டறிந்துள்ளனர். அந்த தீவிற்கு கடலோடிகள் வந்த கப்பலின் பெயரான வோஸ்டாக் என்ற பெயரையேச் சூட்டியுள்ளனர். மனிதர்கள் இல்லாத அந்த தீவு இந்த உலகில் ஒரு புது உலகம் தோன்றியது போல காணப்படுகிறது.
மனிதர்கள் யாரும் அந்த தீவைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளாத காரணத்தால் அத்தீவு அடர் பச்சை பிசோனியா மரங்களால் மூடப்பட்டிருப்பதால் கருந்துளை போலக் காட்சியளித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.