எவ்ளோ சீரியஸான கேள்வி இது.. இப்டியா பண்றது.. உக்ரைன் பற்றி பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு ‘கமலா ஹாரிஸ்’ செய்த செயல்.. வலுக்கும் கண்டனம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சிரித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 2 வாரங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினரும், நூற்றுக்கணக்கான உக்ரைன் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இதனிடையே போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தது.
இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை, போலந்து அதிபர் ஆன்ட்ரெஸஸ் டியூடா இன்று (11.03.2022) சந்தித்து பேசினார். இதனை அடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பெண் நிருபர் ஒருவர், உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு அமெரிக்கா அடைக்கலம் கொடுக்குமா?’ என கமலா ஹாரிஸிடம் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து போலந்து அதிபரிடம், ‘உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்குமாறு அமெரிக்காவை நீங்கள் வலியுறுத்துவீர்களா?’ என கேள்வி கேட்டார்.
இந்த கேள்விகளுக்கு யார் முதலில் பதில் சொல்வது என்பது போல இருவரும் சில நொடி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர், போலந்து அதிபரை பார்த்து, ‘நீங்களே முதலில் பதில் சொல்லுங்கள். ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன்’ எனக் கமலா ஹாரீஸ் கூறிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மக்கள் உயிருக்கு பயந்து தங்கள் தாய்நாட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறிக் கொண்டிக்கின்றனர். இப்படி உள்ள சூழலில், உக்ரைன் மக்கள் குறித்த கேள்விக்கு, ஒரு நாட்டின் துணை அதிபர் இப்படியா சிரிப்பது என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
.@VP Harris awkwardly starts laughing when asked about the Ukrainian refugee crisis pic.twitter.com/SIHhiLbK6X
— Tom Elliott (@tomselliott) March 10, 2022