'66 செ.மீ. நீளம், 26 கிலோ எடை, ஆனா உயரம்?'... 'உலகிலேயே குள்ளமான பசு'... கேரள பசுவின் சாதனையை முறியடிக்குமா?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா விதிமுறைகளையும் மீறி, 51 செ.மீ. உயரமே உள்ள குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
வங்கதேச தலைநகர் டாக்கா அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில் ராணி என்ற பசு உள்ளது. இது 51 செ.மீ. உயரம், 66 செ.மீ. நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. 2 வயதான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.
இந்த பசு குறித்த செய்திகள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள், விதிமுறைகளையும் மீறி இந்தப் பசுவைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்குப் படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் அனைவரும் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என அரசு அதிகாரி ஒருவர் பண்ணை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014-ல் அங்கீகரித்தது.
இதன் உயரம் 61 செ.மீ. ஆகும். இந்நிலையில், 51 செ.மீ. உயரமுள்ள ராணி பசுவுக்கு உலகின் குள்ளமான பசு என்ற அங்கீகாரத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பு விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.