'ஆஸ்திரியா இளவரசி மரணம்...' 'கல்யாணம் ஆகி 2 வருஷம் தான் ஆச்சு...' 'இந்த' நோயால் தான் இறந்துருக்காங்க...!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய வம்சாவளி இளைஞரை திருமணம் செய்த ஆஸ்திரியா இளவரசி மரியா கலிட்சின் இருதய நோயால் காலமான செய்தி அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

31 வயதே ஆன ஆஸ்திரியா இளவரசி மரியா கலிட்சின் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு 2017 ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி ரூப் சிங்கை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு மர்க்சிம் என்ற இரண்டு வயது மகனும் இருக்கிறார்.
1988 ஆம் ஆண்டில் லக்சம்பேர்க்கில் பிறந்த ஆஸ்திரியா இளவரசி மரியா 5 வயது இருக்கும் போது குடும்பத்தோடு ரஷ்யாவிற்கு குடிபெயர்ந்தனர். பின் பட்டப் படிப்பு பயின்ற இளவரசி மரியா, கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரியில் சேர பெல்ஜியம் சென்றார்.
ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கையின்படி, மரியா ஹூஸ்டனில் உள்துறை வடிவமைப்பாளராக பணிபுரிந்த போது தான் அவ்வூரில் புகழ்பெற்ற மற்றும் சிறந்த சமையல் நிர்வாகியான ரிஷி சிங்கை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, வெற்றிகரமாக சிங்கை மணமுடித்தார் மரியா.
இளவரசி மரியா-அண்ணா மற்றும் இளவரசர் பியோட்ர் கலிட்சின் மகளான மரியா, கடந்த மே மாதம் 4 ஆம் தேதி இருதய அனீரிசிம் நோயால் காலமாகியுள்ளார். இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு ஹூஸ்டனில் உள்ள ஃபாரஸ்ட் பார்க் வெஸ்ட்ஹைமர் கல்லறையில் இளவரசி மரியா சிறந்த முறையில் தகனம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் ஆஸ்திரிய அரச குடும்பத்தையும், அந்நாட்டு மக்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
