MAGAWA RAT: கம்போடியாவில் மோப்ப சக்தியால் உயிர்களைக் காத்த மகாவா எலி உயிரிழப்பு
முகப்பு > செய்திகள் > உலகம்கம்போடியாவில் மோப்ப நாய் போலச் செயல்பட்டு போலிசாருக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி குண்டுகளை கண்டுபிடிக்க உதவிய மகாவா எலி

உயிரிழந்தது.
போர்க்காலத்தில் கம்போடியாவில் 60 லட்சத்திற்கும் மேலான கண்ணிவெடிகள் வெடிக்காமல் கைப்பற்றப்படாமல் கைவிடப்பட்டன. 90களில் இருந்து 64, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதனால் மரணித்துள்ளனர். வெடிகுண்டுகளில் சிக்கி மக்கள் உயிரிழப்பதும் காயப்படுவதும் தொடர்ந்தன. 2018ம் ஆண்டு மட்டும் 6000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வெடிகுண்டு விபத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பாதுகாப்புப் படையினருக்கே சவாலாக இருந்த 39 கண்ணிவெடிகளையும் 20க்கும் மேற்பட்ட வெடிபொருள்களையும் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது மகாவா என்னும் குட்டி எலி. ஏழு வயதாகும் மகாவா எலிக்கு பெல்ஜியத்தை சேர்ந்த ஏபிஓபிஓ என்னும் நிறுவனம் பயிற்சி அளித்தது. ஐந்து ஆண்டு பணியில் 1.41 லட்சத்திற்கும் அதிகமான சதுர அடி பரப்பு நிலங்களைக் கிளறியுள்ளது மகாவா.
இதுவரை 71 கண்ணிவெடிகளையும், 38 வெடிப்பொருட்களையும் தனது மோப்ப சக்தியால் கண்டறிந்த மகாவா கடந்த 2021 ஆம் ஆண்டு தான் ஓய்வு பெற்றது. வீடுகளில் மனிதர்களுக்கு தொல்லை தரும் எலிகள் இருந்தாலும், மனிதர்களை காத்து உலகளவில் பலரது பாராட்டை பெற்றது மகாவா. தனது எட்டாவது உயிரிழந்திருப்பது சோகம் தரக்கூடிய செய்தியாக மாறியுள்ளது. உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக தன்னார்வ மையம் தெரிவித்துள்ளது.
அரசு வேலை.. 5 லட்சம் கொடு .. அமைச்சர்களுக்கும் பங்கு தரணும்! வீடியோவில் சிக்கிய திமுக நகர செயலாளர்
