'புனித ஒயின் வழங்க புதிய கட்டுப்பாடு...' அமெரிக்க திருச்சபைகள் நடவடிக்கை...' கொரோனா வைரஸினால் மேலும் பல சிக்கல்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Mar 07, 2020 03:25 PM

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கத்தோலிக்க திருச்சபையில் புனித நீர் வழங்கப்படாது என்னும் செய்தி அமெரிக்க மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

Church announces that holy water will not be provided temporarily

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இது வரை 3500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் கடும் பீதியில் உள்ள இந்நிலையில் அமெரிக்காவும் தங்கள் நாட்டு மக்களுக்கு பல தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்காவில் தேவாலயங்களுக்கு சென்ற மக்கள் அங்கிருந்த அறிவிப்பைக் கண்டு அதிர்ந்துள்ளனர். பொதுவாக தேவாலயங்களில் தரும் புனித நீர் தெளித்து கொண்டால் நோய்கள் ஏதும் அண்டாது என்பது கிருத்துவர்களின் நம்பிக்கை. ஆனால் தேவாலயத்தின் வாசலில் இருக்கும் தீர்த்தத் தொட்டி காலியாக இருக்க அதன் அருகிலேயே `கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக புனிதநீர் கொடுப்பது இல்லை' என்ற போர்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பிராத்தனையில் போது ஆரத்தழுவுதல், கைக்கொடுத்தல், தொட்டு ஆசீர்வாதம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுப்பட வேண்டாம் என்று பிஷப்கள் விசுவாசிகளுக்கு அறிவுரை வழங்கினர். புனித நீர் , புனித ஒயின் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட அப்பம் ஆகியவற்றை பொதுக் கோப்பைகளில் வழங்குவதைத் தவிர்த்து ஒவ்வொருவரும் தனியாக கையிலிருந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

சியாட்டிலின் பேராயர் பால் டி. எட்டியென், உடல்நலமின்மை இருந்தால் கத்தோலிக்கர்களை வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். கூட்டமாகச் சேர்ந்து பிராத்தனை செய்வதைத் தவிர்க்குமாறு மக்களிடம் அறிவுறுத்தினார்.

மக்கள் தங்கள் அமெரிக்காவின் அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகளில், மாணவர்களோ பெற்றோர்களோ வெளிநாடு சென்றால், மருத்துவ அனுமதிச் சான்றிதழ் பெற்ற பின்பே பள்ளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள மியாமி, சிகாகோ, சியாட்டில் மாகாணங்களில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் கொரோனா வைரஸ் பரவுதலின் காரணமாக பரிசுத்த நீர் வழங்குதல் மற்றும் புனித ஒயின் மற்றும் அப்பங்களைப்  தவிர்த்துக் கரங்களில் வாங்க அறிவுறுத்தப்படுத்திருக்கிறது.

கொரோனா வைரஸ் வராமல் தடுக்க அடிக்கடி கைக்கழுவுமாறும், வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து கொள்ளுமாறும் மருத்துவர்களால் பரிந்துரைக்க பட்டுள்ளது. மேலும் சளி இருமல் உள்ளோர் உடனடியாக மருத்துவரிடம் செல்ல அனைத்து உலக நாடுகளின் அரசாங்கமும் தங்களுடைய குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மருந்து கண்டுப்பிடிக்க படாத இந்த சூழ்நிலையில் தற்காத்து கொள்வது மட்டுமே கொரோனா வைரலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி.

Tags : #CHURCH