'யாராவது டிக்கெட் புக் பண்ணி இருக்கீங்களா'?... 'இந்திய விமானங்கள் வர தடை'... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்ஏற்கனவே இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்குத் தடை விதித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தைத் தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்கு வருவதற்குத் தடை விதித்துள்ளன. இந்தச்சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவும் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்திய விமானங்கள் ஆஸ்திரேலியா வர மே 15 வரை தடை விதித்து பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
