பால்டிக் கடலில் 500 வருடங்களுக்கு முன்னர் மூழ்கிப்போன கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பொருள்.. ஆச்சர்யத்தில் நிபுணர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பால்டிக் கடலில் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் மூழ்கிப்போன கப்பலில் இருந்து வித்தியாசமான பொருட்களை கடல்சார் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.
பால்டிக் கடல்
உலக பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஒரு பகுதிதான் இந்த பால்டிக் கடல். ரஷ்யா, டென்மார்க், போலந்து, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே இந்த கடல் பரவியுள்ளது. நாகரீகம் தோன்றிய காலத்திலேயே கடல் வழியாக வாணிப போக்குவரத்தும் இருந்திருக்கிறது. இதற்கு பல நாடுகளில் இன்னும் புழக்கத்தில் இருக்கும் தொன்மையான காப்பியங்கள் சாட்சிகளாக இருக்கின்றன. இருப்பினும் கடலில் ஏற்படும் சீற்றங்கள் காரணமாகவோ, கொள்ளையர்களின் தாக்குதல் காரணமாகவோ பல கப்பல்கள் வீழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்யும் பணிகள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன.
Images are subject to © copyright to their respective owners.
மூழ்கிய கப்பல்
இந்த சூழ்நிலையில் பால்டிக் கடலில் நடைபெற்ற ஆராய்ச்சியில் 500 வருடங்களுக்கு முன்னர் மூழ்கிப்போன கப்பலில் இருந்து பல வினோத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. டென்மார்க் மற்றும் நார்வேயை ஆட்சி செய்த மன்னர் ஹான்ஸ் என்பவருக்குச் சொந்தமான கப்பல் 1495 ஆம் ஆண்டு பால்டிக் கடலில் மூழ்கியிருக்கிறது. பழங்காலக் குறிப்புகள் மூலம், ஸ்வீடனுக்கு பயணிக்கும் போது இந்த கப்பலில் தீவிபத்து ஏற்பட்டு மூழ்கியதாக சொல்லப்படுகிறது.
ஆராய்ச்சி
மூழ்கிப்போன இந்த கப்பல் குறித்த ஆராய்ச்சி 1960 களில் துவங்கி உள்ளது. அப்போது டைவர்ஸ் மூலம் இந்த கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து இந்த கப்பலை அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வந்தனர். இந்த சூழ்நிலையில் இந்த கப்பலில் இருந்து பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. லண்ட் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரெண்டன் ஃபோலே தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தான் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
அந்த பாட்டில்களில் குங்குமப்பூ முதல் மிளகுத்தூள் வரை பல மசாலா பொருட்கள் சேமிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அந்த காலத்தில் ஐரோப்பாவிற்கு வெளியே இருந்து இந்த மசாலா பொருட்கள் வந்திருக்கலாம் எனவும், இவை செல்வத்தின் அடையாளமாக மக்கள் கருதியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள ஆராய்ச்சியாளர் பிரெண்டன் ஃபோலே,"பால்டிக் விசித்திரமானது. குறைந்த ஆக்ஸிஜன், குறைந்த வெப்பநிலை, குறைந்த உப்புத்தன்மை கொண்டது. பல கரிம பொருட்கள் கொண்ட பால்டிக் பகுதியில் புதையுண்ட பொருட்கள் நன்கு பாதுகாக்கப்படுகின்றன. இதுபோன்ற அமைப்பு கடல் அமைப்பு வேறு எங்கும் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்
