'நானே வருமானம் இல்லாம நடிக்க வந்தா'... 'இந்தியர்கள் படத்தையும் பாத்துகிட்டு, இப்படி செய்யலாமா? '... கடுப்பான பிரபல ஆபாச பட நடிகை!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியர்களுக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாக பிரபல ஆபாசப் பட நடிகை ரினி கிரேஸ் காட்டமாக கூறியுள்ளார்.

25 வயதான ரினி கிரேஸ் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை ஆவர். ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை அள்ளிய இவர், கடந்த 2015ம் ஆண்டு கார் பந்தய உலகில் உச்சத்திலிருந்தார். ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா மொத்த சூழ்நிலையையும் தலைகீழாக மாற்றி விட்டது.
ஊரடங்கால் கார் பந்தையங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வருமானம் இல்லாமல் ரினி கிரேஸ் தவித்து வந்துள்ளார். அந்த நேரம் பார்த்து அவருக்கு ஆபாசப் பட வாய்ப்புகள் வந்த நிலையில் அதில் அவர் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் தனது ஆபாசப் படங்கள் அடங்கிய தளத்தில் இந்தியர்களுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தனது படங்களைப் பார்க்கும் அவர்கள், அதோடு நிற்காமல் அவரது புகைப்படம் மற்றும் வீடியோவை பலர் அங்கிருந்து எடுத்து, வேறு தளங்களில் பயன்படுத்துவதாகவும், மேலும் இந்தியாவில் சிலர் போலியாக சமூக வலைத்தள கணக்குகள் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது இணையப் பக்கத்தில் தனது போலி பக்கங்களை உருவாக்குவதையும் உள்ளடக்கத்தைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு பயனாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ''எனது நிர்வாண புகைப்படங்களை விற்றே 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துள்ளேன். ஆனால் நான் இப்போது இந்தியர்களை விரும்பவில்லை. நீங்கள் இந்தியர் என்றால், இப்போது எனது பக்கத்திலிருந்து வெளியேறி விடுங்கள்'' எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
