'இது கடைசியா வந்து 11,600 வருஷம் ஆச்சு...' வெறும் கண்ணால இத பார்க்கலாமா...? நாசாவின் புதிய அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்11,600 வருடங்களுக்கு ஒரு முறை வானில் நிகழக்கூடிய அதிசய பச்சை வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்த்து கண்டு களிக்கலாம் என்று என்று நாசா அறிவித்துள்ளது.
ஸ்வான் என்று பெயரிட்டு அழைக்கப்படும் இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது. இதன் வால் மட்டும் ஒரு கோடியே 77 லட்சம் கி.மீ., நீளம் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பனி மற்றும் தூசுக்களால் ஆன வால் நட்சத்திரம் தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி செல்வதாகவும், தற்போது பூமியிலிருந்து 5.3 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்த நட்சத்திரம் மே மாத இறுதி வாரத்தில் கண்களுக்கு தெரியும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சூரியனை நோக்கிய திசையில் செல்லும் போது மேலும் வெப்பமடைந்து அது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது என்று கூறும் ஆய்வாளர்கள் இதை 5 முதல் 6 நாட்கள் வரை கண்ணாடி ஏதுமின்றி வெறும் கண்களாலேயே கணடு மகிழலாம் என்று தெரிவித்துள்ளனர்.