‘நம்ம ரெண்டு பேரும் இனிமே ஃப்ரண்ட்ஸ்...’ ‘பறக்க முடியாத புறாவும், நடக்க இயலாத நாய்க்குட்டியும்...’ வைரலான நட்பின் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 20, 2020 02:44 PM

குறைபாடுகளோடு மீட்கப்பட்ட ஹெர்மன் என்னும் புறாவும், லுண்டி என்னும் நாய்க்குட்டியும் இணைபிரியாமல் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

A fly pigeon and a dog that cannot walk are friends

நரம்பு மண்டல நோய் பாதிப்பால் பறக்க முடியாமல் போன ஹெர்மன் என்னும் புறாவும், பின்னங்கால்களின் பிறவிக் குறைபாட்டால் நடக்க முடியாத லுண்டி என்னும் நாய்க்குட்டியும் இணைபிரியாத நண்பர்களாக ஒன்றாகவே இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சி பின்னூட்டங்களோடு பகிரப்பட்டு வருகிறது.

நியூயார்க்கின் ரோசெஸ்டர் நகரின் மியா அறக்கட்டளையில் இருக்கும் ஹெர்மன் என்னும் பறக்க முடியாத புறாவும், கால்கள் குறைபாட்டால் நடக்க முடியாத லுண்டி நாய்க்குட்டியும் இணை பிரியாமல் நட்பை வளர்ப்பது அங்குள்ளவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

காயமடைந்தோ, நோய் குறைபாடுகளாலோ பாதிக்கப்பட்ட விலங்குகளை பொதுவாக அமெரிக்க பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவது அந்நாட்டின் வழக்கம். சி.என்.என் அறிக்கைத் தகவலின்படி, சில விலங்குகளை பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பாமல் தொண்டு நிறுவனங்களிலேயே வைப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அப்படி பாதுகாக்கப்படும் விலங்குகளில் ஹெர்மனும், லுண்டியும்தான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #FRIENDSHIP