'நாம ரெண்டுபேரும் இனிமேல் தோஸ்த்'...! சிறுவனிடம் 'முள்ளம்பன்றி' செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 17, 2020 05:01 PM

முள்ளம்பன்றி ஒன்று சிறுவனுடன் நட்பு பாராட்டும் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Friend the hedgehog with the boy and following

முள்ளம்பன்றி என்றாலே அதன் உடம்பில் இருக்கும் முட்கள் தான் நம் நினைவிற்கு வருகின்றது. முள்ளம்பன்றி மனிதர்கள் மற்றும் விலங்குகள் இடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள தனது உடம்பில் இருக்கும் முட்களை பயன்படுத்துகிறது.

மனிதர்கள் இறைச்சிக்காகவும், விலங்கினங்களான காட்டுப்பூனை, சிறுத்தை, புலி போன்றவையும் இரைக்காக இவற்றை வேட்டையாடுகின்றனர். இவ்விதம் இருக்க முள்ளம்பன்றி ஒன்று சிறுவனிடம் நட்பு பாராட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இருவரும் இணைந்து ஒன்றாக சாலையில் வாக்கிங் செல்கின்றனர். சிறுவன் எந்தப்பக்கம் செல்கிறானோ, அந்த பக்கமாகவே முள்ளம்பன்றியும் செல்கிறது.  இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

 

Tags : #FRIENDSHIP