விமானத்தில் இருந்த 'பிரபல' இசையமைப்பாளர்...! 'தரையிறங்கும்போது திடீர்னு தீப்பிடிச்சு விபத்து...' - மனைவி உட்பட '9 பேர்' பலி...!
முகப்பு > செய்திகள் > உலகம்அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இருந்த பிரபல இசையமைப்பாளர்,மனைவி, குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஃபாலோ லா மூவி' என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ், தனது இசையமைப்பு மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா (31) என்ற மனைவியும் ஜேடன் (4) என்ற மகனும் உள்ளனர்.
பொதுவாக பிரபலங்கள் பொது விமானங்களில் பயணிக்காமல் தங்கள் குடும்பத்திற்கு என தனி சொகுசு விமானங்களை வாங்கியோ அல்லது வாடகைக்கு எடுத்தோ பயணிப்பது வழக்கம். அதுபோல பிரபல இசையமைப்பாளரான ஜோஷி சண்டோ டொமினிகோவில் உள்ள இசபெல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தன் மனைவி, குழந்தை மற்றும் நண்பர்களோடு தனி சொகுசு விமானம் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லெண்டோ நகருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சொகுசு விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென கோளாறு காரணமாக விமானம் மீண்டும் இசபெல்லா விமான நிலையத்திலேயே அவசரமாக விமானி தரை இறக்க திட்டமிடப்பட்டது.
விமானத்தை தரையிறக்கும் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த துரதிஷ்ட்டவசமான சம்பவத்தில் ஜோஷி, அவரது மனைவி ஹர்சியா, மகன் ஜேடன் உள்பட விமானத்தில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பரவி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் பலி ஆயினர்.
க்ரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் விபத்து நடந்தபோது தப்பினார். ஆனாலும் அவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்றைய தினம் அவரும் இறந்தார். இந்த நிலையில் மற்றுமொரு விமான விபத்து மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மற்ற செய்திகள்
