'புரட்டி எடுத்த வயிற்று வலி'... 'பீரியட்ஸ் இல்ல மலச்சிக்கலா இருக்கும்ன்னு அசால்ட்டாக விட்ட 21 வயது இளம்பெண்'... காத்திருந்த பேராபத்து!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Oct 14, 2020 05:07 PM

நமது உடலை முறையாகக் கவனிக்காமல் விட்டாலோ அல்லது உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பொருட்படுத்தாமல் விட்டால் அது எத்தகைய ஆபத்தில் கொண்டு சென்று விடும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.

21 Years old Woman had second womb filled with period blood

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 21 வயது இளம்பெண் மேடலின் ஜோன்ஸ். இவர் கடந்த 4 ஆண்டுகளாகத் தீராத வயிற்று வலியால் அவதிப் பட்டு வந்துள்ளார். வயிற்று வலி வரும்போதெல்லாம் தனக்கு மலச்சிக்கல் அல்லது மாதவிடாயின் போது வரும் வயிற்று வலியாக இருக்கலாம் என அவரே முடிவு செய்து விட்டு அஜாக்கிரதையாக இருந்து வந்துள்ளார். மேலும் மலச்சிக்கலுக்கான சில மருந்துகளையும் உட்கொண்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வலி அதிகமாக வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

21 Years old Woman had second womb filled with period blood

அப்போது தான் அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. மேடலினுக்கு நடத்தப்பட்ட மருத்துவப்பரிசோதனையில் அவரின் கருப்பையில் ரத்தக் கட்டி பெரிய அளவிற்கு இருப்பதைப் பார்த்து மருத்துவர்களே அதிர்ந்து போனார்கள். இன்னும் சில காலம் விட்டிருந்தால் அந்த கட்டி உடைந்து மேடலினின் உயிருக்கே ஆபத்தாக அமைந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மேடலினை பார்ப்பதற்குப் பிரசவத்திற்குத் தயாராக இருக்கும் பெண்ணை போன்று இருந்ததாக மருத்துவர்களும், செவிலியர்களும் தெரிவித்தார்கள்.

21 Years old Woman had second womb filled with period blood

மேடலினின் கருப்பைகளில் ஒன்று முழுமையாக மாதவிடாயின் போது வெளியேறும் ரத்தத்தால் நிரப்பப்பட்டுள்ளது எனப் பரிசோதனையில் தெரியவந்தது. பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தான் மேடலின் தான் அவதிப்பட்டு வந்த வலியிலிருந்து முழுமையான நிம்மதி கிடைத்தது. இதுகுறித்து பேசிய மேடலின், ''எனக்கு வயிற்று வலி இருந்த போதும் சிறு வயதிலிருந்தே மருத்துவமனை பக்கம் போகக் கூடாது என்ற எண்ணம் இருந்தது தான் முக்கிய காரணம். அது எவ்வளவு தவறு என்பது தற்போது புரிந்துள்ளது.

21 Years old Woman had second womb filled with period blood

மேலும் இந்த பிரச்சனை காரணமாக எனது சிறுநீரகம் ஒன்றும் செயலிழந்தது போனது. அதுவும் தற்போது அகற்றப்பட்டுள்ளது எனக் கூறினார். எனவே பெண்கள் தங்களின் உடலில் ஏதேனும் மாற்றம் தென்பட்டாலோ அல்லது பிரச்சனை இருந்தாலோ என்னைப் போன்று தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்'' எனக் கூறியுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மேடலின் ஜோன்ஸ் தற்போது தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 21 Years old Woman had second womb filled with period blood | World News.