3 வருஷத்துக்கு அப்பறம் மறுபடியும் வந்திருச்சு.... இவ்ளோ எடையா? மிரள வைக்கும் மான்ஸ்டர் சுறா..
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திற்கு அருகே பிரம்மாண்ட சுறாமீன் ஒன்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
Also Read | அப்பாவுடன் லிட்டில் பிரின்சஸ் அடிக்கும் லூட்டி..ஒளிஞ்சிருந்து மனைவி எடுத்த கியூட் வீடியோ..
கடல்சார் ஆராய்ச்சி குழுமமான OCEARCH, சுறா மீன்களை ஆய்வு செய்து வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள சுறா வகைகள், அவற்றின் இடப்பெயர்வு, அதன் வாழ்க்கை முறை குறித்து இந்த நிறுவனம் ஆராய்ச்சி செய்துவருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் 12 அடி நீளமுள்ள ராட்சச சுறா மீனை கண்டறிந்துள்ளது.
ராட்சச சுறா
அமெரிக்காவின் நியூஜெர்சி கடல்பகுதியில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி பிரம்மாண்ட சுறா மீன் கண்டறியப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 12 அடி 4 அங்குலம் நீளமும், 452 கிலோ எடையும் கொண்ட இந்த ராட்சச மீன் முதன் முறையாக கனடா நாட்டில் உள்ள நோவா ஸ்கோடியா பகுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. அப்போது இதன் உடலில் உள்ளே டிராக்கிங் கருவியை ஆராய்ச்சியாளர்கள் பொருத்தினர். தற்போது 3 ஆண்டுகள் கழித்து இந்த மான்ஸ்டர் மீன் மீண்டும் தென்பட்டுள்ளது.
வலிமையான சுறா
OCEARCH ஆராய்ச்சி அமைப்பு வட மேற்கு அட்லாண்டிக் கடலில் கண்டறிந்த 53வது சுறா இதுவாகும். இதற்கு 'ironbound shark' எனப் பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். வலிமையான கடல் விலங்குகளில் ஒன்றாக இந்த சுறா மீன் அறியப்படுவதால் இந்த பெயரை வைத்ததாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் பாப் ஹியூட்டர் இதுபற்றி பேசுகையில்,"இந்த சுறாவிற்கு 20 வயது இருக்கலாம். எங்களது நிறுவனம் 17.5 அடி நீளமும் 4000 பவுண்டு எடையும் கொண்ட மிகப்பெரிய சுறாக்களையும் கண்காணித்து வருகிறது" என்றார்.
கண்காணிப்பு
2019 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்டதற்கு பின்னர், பலமுறை இந்த மீனை மீண்டும் பார்க்க முயற்சித்ததாகவும் அது தற்போது நடைபெற்றிருப்பதாகவும் பாப் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இந்த மீன் 21,000 கிலோமீட்டர் நீந்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வழக்கமாக அமெரிக்க கடல் பகுதியில் வசிக்கும் இந்த மீன், ஆண்டு தோறும் கோடை காலங்களில் வட திசையில் பயணித்து கனடா நாட்டில் உள்ள நோவா ஸ்கோடியா பகுதிக்கு சென்றுவிடும் என்கிறார் இவர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8