அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்.. பட்டு சேலை அணிந்து பரிமாறும் ரோபோ.. வியக்கும் வாடிக்கையாளர்கள்
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்மைசூர்: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் மனித உலகம் முன்பை விட விசித்திரமாக மாறிக்கொண்டே வருகிறது. ஒருகாலத்தில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நினைத்த விஷயங்கள் அதை தாண்டி அடுத்த கட்டத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறது.

அசுர வளர்ச்சியில் புதிய தொழில்நுட்பங்கள்:
புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுடங்கள் இந்த நூற்றாண்டில் அசுர வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. பழைய சிந்தனை கொண்ட மனிதர்கள் இந்த அசுர வளர்ச்சியைக் கண்டு பதற்றமடைகிறார்கள். இதனால் பல நன்மைகளும் சில தீமைகளும் இருந்தாலும் இவை அனைத்துமே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஏதாவது பொருட்கள் வாங்க கூட யாரும் இப்போது வெளியில் செல்வதில்லை. ஒரு செயலியிலேயே காய்கறி, துணிமணி, உணவு பொருட்கள் என அனைத்தையும் நம் கைக்குள்ளே கொண்டு வந்து விடுகிறது.
பல துறைகளில் பணியாற்றும் ரோபோ:
கடந்த சில வருடங்களாவே ரோபோக்கள் அதையும் தாண்டி மனித உலகத்தில் எட்டிப்பார்த்து வருகின்றனர். பெரும்பாலான தொழிற்சாலைகளில் மனித எண்ணிக்கையை குறைத்து ரோபோக்களை வேலைவாங்கி வருகின்றனர். ஜப்பான்களில் ரோபோக்கள் ராணுவ களத்திலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றன. கடந்த வருடம் கூட மலையாளத்தில் ஆண்டிராயிட் குஞ்சப்பன் என்ற திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரோபோ இருக்கும் விதமாக காட்சி படுத்தியிருப்பார்கள்.
பட்டு சேலை அணிந்த ரோபோ:
அதன் தொடர்ச்சியாக, மைசூருவில் பிரபலமான சித்தார்த்தா ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ கொண்டுவரப்பட்டுள்ளது. இவை மனிதர்கள் போலவே பட்டு சேலையுடன் வந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு கொண்டு வருகிறது.
என்னதான் அறிவியல் வளர்ச்சியையு, அதன் பிரம்மாண்டத்தையும் நாம் ரசித்தாலும் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் என சொல்லும் குரல் கேட்காமல் இருப்பது ஒரு குறை தான். மைசூரில் ஓட்டல் நிர்வாகத்தினர் அந்த ரோபோவை சுமார் ரூ.2.50 லட்சத்திற்கு வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
