VIDEO: சிங்கர்ஸ்க்கே டஃப் கொடுக்கும் தேயிலை தொழிலாளியின் உருக வைக்கும் பாட்டு.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடிக்கடி இணையத்தில் ஏராளாமான வீடியோக்கள் வைரலாவதை நாம் பார்த்திருப்போம். இதில், பல வீடியோக்கள் நம் கவனத்தில் படும் நிலையில், அதிர்ச்சிகரமான, வினோதமான, மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையில் என பல வீடியோக்கள் இணையத்தில் நிரம்பி கிடக்கும்.

அதிலும் குறிப்பாக, சில தினங்களில் நாம் பார்க்கும் வீடியோக்கள் அந்த தினத்தையே இன்னும் பாசிட்டிவ் ஆகவும், மிகவும் ஸ்பெஷல் ஆகவும் கூட மாற்றலாம்.
அத்துடன் மட்டுமில்லாமல், அப்படிப்பட்ட வீடியோக்கள் நமது முகத்தில் ஒருவித சிரிப்பையும் உண்டு பண்ணி, நம்மை பெரிய அளவில் ஊக்குவிக்கவும் செய்யும்.
இந்நிலையில், அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
தேயிலை தோட்டம் ஒன்றில், தொழிலாளி ஒருவர் தேயிலை பறித்துக் கொண்டே இருக்கிறார். தன்னுடைய தீவிரமான வேலைக்கு மத்தியிலும் அதனை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்காக அவர் செய்த விஷயம் தான், தற்போது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா, சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் 'புதிய பறவை'. இந்த படத்தில் "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" என்ற பாடல் வரும்.
இந்த பாடலை தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வரும் பெண் தொழிலாளி ஒருவர், மிகவும் அற்புதமாக அதுவும் அசத்தலான குரலில் அப்படியே மெய் மறக்க செய்யும் வகையில் பாடுகிறார். இதனை கேட்கும் போது, அப்படியே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பான காலத்திற்கு நம்மை கொண்டு செல்லும் வகையில், மதி மயக்கும் குரலாகவும் அது அமைந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. பல பாடகர்கள் குரலுக்கே போட்டி கொடுக்கும் வகையில், இந்த தேயிலை தோட்டத்து தொழிலாளியின் குரல் இருபப்தாகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரையும் இந்த குரல் வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | டீ விற்கும் வாலிபரை கரம்பிடித்த மருத்துவர்.. "அவரு மேல் Love வந்த காரணம் தான் அல்டிமேட்!!"..
