"துணிவு இருந்தாலும்.. அங்கல்லாம் போய்டாதீங்க வாரிசு முக்கியம்".. வேற லெவலில் புயல் அப்டேட்.. சர்ப்ரைஸ் ஆன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கிவரும் வேளையில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது வெதர் அப்டேட் ஒன்று.
Also Read | மாண்டஸ் புயல்: இந்த நேரத்துல மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது.. போக்குவரத்து கழகம் தகவல்..!
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரங்களில் கரையை கடக்க கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மாண்டஸ் புயல் தற்போது வலுவிழந்து புயலாக சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைவெளியில் கரையை கடக்கும். இது புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே உள்ள மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது. சமூக வலை தளங்களிலும் வானிலை நிபுணர்கள் புயல் குறித்த அப்டேட்டுகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை வெதர் எனும் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு புயல் அப்டேட் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த பதிவில்,"துணிவு இருந்தாலும், இன்றிரவு கடற்கரைகளுக்கு அருகில் செல்லாதீர்கள். உங்கள் குடும்பத்திற்கு வரிசு தான் முக்கியம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்களுக்கு இந்த செய்தி சென்றுசேரவேண்டும் எனக் கருதியே இப்படி அப்டேட் வழங்கியதாக அந்த பக்கத்தினை இயக்கிவரும் ராஜா ராமசாமி இன்னொரு பதிவில் தெரிவித்திருக்கிறார்.
பொங்கலை முன்னிட்டு அஜித்குமார் நடிக்கும் துணிவு படமும், விஜய் நடிக்கும் வாரிசு படமும் திரைக்கு வரவிருக்கின்றன. இந்நிலையில், இதனை பயன்படுத்தி மக்களுக்கு வெதர் அப்டேட் கொடுத்த ராஜா ராமசாமியை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
Also Read | மாண்டஸ் புயல்.. அடுத்த 24 மணிநேரம் முக்கியம்.. வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் Exclusive பேட்டி..!