மாண்டஸ் புயல்: இந்த நேரத்துல மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது.. போக்குவரத்து கழகம் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இரவு தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Also Read | மாண்டஸ் புயல்.. இந்த ஏரியால மழை தட்டி வீசப்போகுது.. தமிழக வெதர்மேன் கொடுத்த எச்சரிக்கை..!
இருப்பினும் கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையை கடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், 3 மணி நேரத்திற்கு பிறகும் பேருந்துகள் இயங்காது எனவும் போக்குவரத்து கழகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும் இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரங்களில் கரையை கடக்க கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன முதல் அதிக கன மழை பெய்யலாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இதனிடையே மாண்டஸ், தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை அரசு பேருந்துகள் இயக்கப்படாது என நேற்று போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று இரவு அரசு பேருந்துகள் மாநிலம் முழுவதும் வழக்கம் போல இயங்கும் என போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. மேலும், கடலோர பகுதிகளில் மட்டும் புயல் கரையை கடப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும், 3 மணி நேரத்திற்கு பிறகும் பேருந்துகள் இயங்காது என போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது.
Also Read | மிரட்டும் மாண்டஸ் புயல் காரணமாக இடிந்து விழும் வீடுகள்.. !! வீடியோ
