தமிழகத்தில் மீண்டும் ‘ஊரடங்கு’ அமலுக்கு வருகிறதா..? மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தவுள்ளதாக பரவிய வதந்திக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார்.
![TN Health Secretary Radhakrishnan explains on lockdown rumours TN Health Secretary Radhakrishnan explains on lockdown rumours](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tn-health-secretary-radhakrishnan-explains-on-lockdown-rumours.jpg)
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். அதனால் கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை கடைபிடிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதில் சென்னை ஐஐடி கல்லூரியில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. அங்கு 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மந்தாகினி விடுதியில் தங்கியிருந்த மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 60 பேருக்கு தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மேலும் 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (26.04.2022) செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ‘இதுவரை ஐஐடி கல்லூரி வளாகத்தில் 2,057 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருக்கிறது. தேவைப்பட்டால் கிண்டி கிங் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்’ என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 1000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகிறது. ஆனாலும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மேற்கொண்டு நோய்ப்பரவல் ஏற்படாமல் நம்மால் தடுக்க முடியும். மற்றபடி கொரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பான தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என கூறினார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)