'காற்று கூட உள்ள நுழைய முடியாது...' 'திடீர்னு மூடிய லாக்கர் ரூம் கதவு...' 'சிக்கிய ஊழியர்...' கடைசியில என்ன ஆச்சு...? - பதைபதைக்க வைக்கும் சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி மாவட்டம் கே.கே நகரை சேர்ந்த ஒய்வு பெற்ற தாசில்தார் வேணுகோபால். இவர் கடந்த வெள்ளிக்கிழமை (22-01-2021) ஜங்ஷன் அருகிலுள்ள கார்ப்பரேசன் வங்கியில் உள்ள தனது லாக்கரை பார்க்க போயுள்ளார்.
தலைமை கேசியரிடம் உள்ள ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, தலைமை கேசியர் அவருடன் சென்று லாக்கர் ரூமை திறந்து , அவரின் லாக்கரையும் திறந்து கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். லாக்கரை ஆப்பரேட் செய்து பார்த்த பின்பு, திரும்ப வெளியே வர முயன்ற போது லாக்கர் ரூமின் கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பெரிய கதவை வேணுகோபால் ஓங்கி தட்டி பார்த்தும், அங்கிருந்தவர்களை அழைத்து பார்த்தும் எந்த பயனும் இல்லை. அப்போது தான் அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் ஒரு பாயிண்ட் செல்போன் டவர் கிடைத்துள்ளது. செல்போனில் இருந்து வங்கியின் போனுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு நிலைமையை வேணு கோபால் விளக்கி தன்னை காப்பாற்றுமாறு கேட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த ,வங்கி ஊழியர்கள் உடனே சென்று லாக்கர் இருந்த அறையின் கதவை திறந்து அவரை நல்லபடியாக மீட்டனர்.
செல்போன் எடுத்து சென்றிருந்ததால் வேணுகோபால் உயிர் தப்பினார். இல்லையென்றால், தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை ஆகும். எனவே, காற்று கூட புக முடியாத அறையில் அவர் மாட்டிக்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே நடுங்குகிறது என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
எலாக்கர் ரூமிற்குள் வாடிக்கையாளர்இருப்பதை கூட மறந்து கவனக்குறைவோடு பூட்டிய ஊழியரின் பொறுப்பற்ற தன்மையால் பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு வங்கி நிர்வாகம் மனித உயிரின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு வேணுகோபால் புகார் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.