வயசான காலத்துல 'சோறு,தண்ணி' கெடைக்கல... விஷமருந்தி உயிருக்கு 'போராடிய' தாய்... கடைசிவரை கண்டுகொள்ளாத 'மகன்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 14, 2020 10:02 PM

சீர்காழி அருகே இரண்டு மகன்கள் மற்றும் மருமகள்கள் தன்னை கவனிக்காத காரணத்தால் மனமுடைந்து விஷமருந்தி தாய்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The son kept their poisoned Mom in home and not take to hospital

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள நாங்கூர் பகுதியை சேர்ந்தவர் அருமைக்கண்ணு. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு மண் இறந்து விட தனது இரண்டு மகன்களின் வீட்டில் மாறி மாறி தங்கி வந்துள்ளார். மூத்த மகன் ராகவன் மற்றும் அவரது மனைவி அருமைக்கண்ணை சரிவர கவனிக்காமல் வீட்டிலிருந்து புறக்கணித்துள்ளனர் . இந்நிலையில் இளையமகன் வீரமணி வீட்டில் தங்கிய போதும் வீரமணி மற்றும் அவரது மனைவியும் அருமைக்கண்ணுக்கு உணவு வழங்காமலும் ஓழுங்காக கவனிக்காமலும் இருந்துள்ளனர்.

இதனால் கூலி வேலை செய்து காலத்தை கடக்கலாம் என முடிவு செய்த அருமைக்கண்ணுக்கு முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டு மகன்கள் மற்றும் மருமகள்கள் இருந்தும் உணவுக்கு மருந்துக்கும் தவித்த நிலையில் விரக்தியடைந்த அருமைக்கண்ணு அருகிலுள்ள தோப்பில் அரளி விதை அரைத்து குடித்துள்ளார். இதனால் பதறிப் போன அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். அருமைக்கண்ணுவின் மகன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் அவர்கள் வந்து தாயை பார்க்கவில்லை.

ஆம்புலன்ஸ் ஊருக்குள் வந்த போது உடன்செல்ல மகன்கள் முன் வராத காரணத்தால் அம்புலன்ஸ் திரும்பி சென்றது. இதுபற்றி தகவலறிந்த திருவெண்காடு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்து அருமைக்கண்ணை சிகிச்சைக்கு அழைத்து செல்ல இரு மகன்களையும் வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து மீண்டும் ஆம்புலன்ஸ் வருவதற்குள்  அருமைக்கண்ணு துடிதுடித்து உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி நடந்த நிலையில் போலீசார் அருமைக்கண்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து போலீசார் அருமைக்கண்ணுவின் இரண்டு மகன்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

விஷமிருந்து உயிருக்கு போராடிய தாயை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாத காரணத்தால் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TAMILNADU