‘வான்டடா போய் வம்புக்கு இழுத்து...’ ‘போதையில நிம்மதியா தூங்கி கொண்டிருந்த மனுசன...’ பதபதைக்க வைக்கும் உச்சக்கட்ட பயங்கரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 09, 2020 05:22 PM

மது அருந்தி போதையில் படுத்திருந்த ஒருவரை, இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யும் சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The brutality of taking a stone and throwing it on the head

டேனியல் என்பவர் கடலூர் மாவட்டம் வன்னியர் பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவர் நேற்று இரவு (08.03.2020) புதுச்சேரி கன்னியகோவில் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு மண்ணாதீஸ்வரர் கோயில் அருகே போதையில் விழுந்துள்ளார். இன்று காலையில் அவரை எழுப்ப முயன்ற பொது மக்கள் டேனியல் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகிலிருக்கும் கடைகளில் இருந்த சி.சி.டி.வி காட்சி பதிவுகளையை சோதனை செய்துள்ளனர். சோதனையின் போது இளைஞர்  ஒருவர் போதையில் தூங்கிக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்புகிறார். பின் அவருக்கும் டேனியலுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுதுள்ளது மேலும் வாக்குவாதம் முற்ற டேனியலை அந்த இளைஞர் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த நிகழ்வு சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது. சம்பவம் நிகழ்ந்த நேரம் சி.சி.டி.வி பதிவின் படி  நள்ளிரவு 12 மணி என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது போலீசார் வீடியோ காட்சியின் அடிப்படையில் கொலையாளியை தேடிவருகின்றனர்.

Tags : #STONE