அருண்மொழி வர்மன் கெட்டப்-க்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?.. அசரவைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 26, 2023 01:36 PM

பொன்னியின் செல்வன் படத்தின் அருண்மொழி வர்மன் கெட்டப் உருவாக்கம் பற்றிய வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Ponniyin Selvan Character Getup making Video Goes Viral

                             Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன்

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

Images are subject to © copyright to their respective owners.

PS-2

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில்  பொன்னியின் செல்வன் - 2 படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

இந்த சூழ்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில் அருண்மொழி வர்மன் கதாப்பாத்திர கெட்டப் உருவாக்கம் குறித்த பணிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அருண்மொழி வர்மனின் வெவ்வேறு உடையமைப்பு மற்றும் அணிகலன் உருவாக்கம் பற்றியும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags : #PONNIYIN SELVAN #PS-2

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ponniyin Selvan Character Getup making Video Goes Viral | Tamil Nadu News.