‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்’.. 2 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..! நீதிமன்றம் உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 01, 2019 03:26 PM

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pollachi sexual case, Goondas act cancelled on two persons

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தக்குமார் ஆகிய நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் சுமத்தப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி திருநாவுக்கரசு தாய் பரிமளா மற்றும் சபரிராஜனின் தாய் லதா ஆகியோ சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (01.11.2019) விசாரித்தது. அதில், குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களிடம் முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.