‘முதல் மேட்ச் தோல்வி’.. சிஎஸ்கே ப்ளேயிங் 11-ன மாத்துனா.. அந்த பையனுக்கு வாய்ப்பு கிடைக்க சான்ஸ் இருக்கு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இளம் வீரர் ஒருவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் கோலாகலமாக நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. ஆனால் அப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. இந்த சூழ்நிலையில் இன்று (31.03.2022) லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடவுள்ளது.
முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. அதன்படி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் அசத்திய ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இடம் பெற்றிருந்தார். அப்போது அதிவேக சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி இவரை வாங்கியது.
அதேபோல் விசா பிரச்சனை முடிந்து மொயின் அலி சமீபத்தில் சென்னை அணியில் இணைந்துள்ளார். அதனால் இன்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட வாய்ப்புள்ளதா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி எப்போதும் பிளேயிங் லெவலில் அதிக மாற்றம் செய்யாது என்பதால், கொல்கத்தா அணிக்கு எதிரான பிளேயிங் லெவனில் இடம்பெற்ற வீரர்களை மீண்டும் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.