"இத விட என்ன சர்ப்ரைஸ் குடுத்துட முடியும்?!.." ஆனந்த கண்ணீரில் மனைவி.. 3 வருசமா ரெடி ஆன 'GIFT'..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jul 29, 2022 11:39 PM

மிகவும் நெருக்கமான ஒருவருக்கு வித்தியாசமாக, மனதில் நிற்கக் கூடிய சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுப்பதை நாம் நிறைய கேள்விப்பட்டு இருப்போம்.

man gifts new house to wife on 12th wedding anniversary

அதிலும் குறிப்பாக, காதல் ஜோடிகள் அல்லது தம்பதிகள், தங்களின் பார்ட்னருக்கு கொடுக்கும் சர்ப்ரைஸ் என்பது, மிக மிக ஸ்பெஷலான ஒன்றாகும். அப்படி உருக வைக்கக் கூடிய நிறைய வகை வகையான சர்ப்ரைஸ்களை நாம் பார்த்திருக்கலாம்.

ஆனால், அவை அனைத்தையும் விட ஒரு படி மேலே உள்ளது, தனது மனைவிக்காக 12 ஆவது திருமண நாளில் ஒரு கணவர் கொடுத்து அதிரடி சர்ப்ரைஸ்.

கென் என்பவர், 12 வது திருமண நாளின் போது, தனது மனைவிக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அப்படி கொடுத்த சர்ப்ரைஸ் தொடர்பான வீடியோ ஒன்றை அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் கென் வரவே, மனைவியின் கண்களை குழந்தைகள் பொத்தி வைத்துக் கொண்டபடி வருகின்றனர்.

man gifts new house to wife on 12th wedding anniversary

தொடர்ந்து, ஒரு இடத்தில் வாகனம் நிற்கவே, கணவர் கென் மனைவியின் கண்ணை பொத்திக் கொண்டு, காரிலிருந்து வெளியே இறக்குகிறார். பின்னர் கணவர் கை எடுத்ததும் கண் திறந்த மனைவி, கணவரின் சர்ப்ரைஸால் ஒரு நிமிடம் ஆடி போய், ஆனந்த கண்ணீர் வடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.

man gifts new house to wife on 12th wedding anniversary

கடந்த மூன்று ஆண்டுகளாக, மனைவிக்கே தெரியாமல் வீடு ஒன்றைக் கட்டி வந்த கென், அதனை தனது 12 வது திருமண நாளில், பரிசாகவும் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கென், தனது கேப்ஷனில், "இது ஓனருக்கான திருமண நாள் கிஃப்ட். கிட்டத்தட்ட மூன்று வருடமாக உருவான சென்னை வீடு. காதலை கொண்டாடுவோம். எல்லா கசப்பையும் காதலால் வெல்வோம். இனிய 12 வது திருமண நாள் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

வீடு கட்டியதுடன் நிறுத்தி விடாமல், மொத்தமாக ஃபர்னிச்சர் பொருட்களையும் வாங்கி போட்டுள்ள கென், மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் பல இடங்களில் போட்டு வைத்துள்ளார். அது மட்டுமில்லாமல், இந்த வீட்டில் லிப்ட் இருப்பதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, ரெஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்த போது, மனைவிக்கு மாற்று ஆடை வாங்கி கொடுக்க கூட பணம் இல்லாமல் இருந்ததாகவும், திருமணத்தின் ஒரு புகைப்படம் கூட எங்களிடம் இல்லை என்றும் உருக்கத்துடன் கென் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் கலங்கிப் போன நிலையில், மிகச் சிறந்த சர்ப்ரைஸ் என்றால் இது தான் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Tags : #WEDDING ANNIVERSARY #சர்ப்ரைஸ்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man gifts new house to wife on 12th wedding anniversary | Tamil Nadu News.