சிறுத்தை புலி நடமாட்டம்? ‘கிராம மக்கள் யாரும் வெளிய வர வேண்டாம்’.. வனத்துறை அறிவுறுத்தல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அருகே சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர், உப்புப்பள்ளம் மற்றும் மணக்காடு ஆகிய கிராமப்பகுதிகளில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பாதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த சிறுத்தை புலி ஆடுகளை தாக்கி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து சிறுத்தை புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். மேலும் கூண்டு வைத்து சிறுத்தை புலியை பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் கிராம மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல் கோவை பி.கே.புதூர் பகுதியிலுள்ள தனியார் குடோனில் 3 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயன்று வருகின்றனர். குடோனுக்குள் 3 குண்டுகள் வைத்து அதற்குள் இறைச்சியை வைத்துள்ளனர். ஆனாலும் கூண்டுக்குள் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வருகிறது.
மூன்று நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் குடோனில் உள்ள ஒவ்வொரு அறைகளாக சிறுத்தை சுற்றி வருகிறது. அதனால் தானாக உணவு தேடி கூண்டுக்குள் சிக்கும் வரை வனத்துறையினர் காத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.