‘மோடி என் இன்ஸ்பிரேஷன்’: பாஜகவில் அதிரடியாக இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Mar 04, 2019 11:55 AM
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா சோலங்கி அதிரடியாக பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த மே மாதம் தன் காரில் மோதிய போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்ததாக பரபரப்பாக பேசப்பட்ட ரிவாபா, அதன் பின்னர் கர்ணி சேனா அமைப்பின் பெண்கள் பிரிவின் தலைவராக செயல்பட்டார். அந்த சமயத்தில்தான் தீபிகா படுகோனின் பத்மாவத் படத்துக்கு எதிராக இந்த அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்நிலையில் தற்போது அந்த அமைப்பில் இருந்து விலகி குஜராத்தில் விவசாயத்துறை அமைச்சர் ஃபால்டடு முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ள ரிவாபா, பிரதமர் மோடிதான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் பாஜகவில் இணைந்து சேவை செய்யும் நோக்கில் செயல்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு தனது முதல் டார்கெட், ஆண்களின் சார்பில்லாத சூழலில் கூட பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொண்டு சமூகத்தில் மேம்பட அவர்களுக்குத் தேவையான அதிகாரங்களைப் பெற்றுத் தருவதுதான் என்றும் தன்னிடம் நாட்டுக்கு நலன் பயக்கக் கூடிய ஏராளமான நல்ல திட்டங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தன் கணவர் ரவீந்திர ஜடேஜாவைப் பொருத்தவரை அவரை இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக தான் பார்ப்பதாகவும், இளைஞர்களின் அடையாளமாக இருக்கும் அவரைக்கொண்டே இளைஞர்கள் சக்தியை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை உள்ளதாகவும், ஆனால் பாஜகவில் இருப்பதால், தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னை குறுக்கிப் பார்க்க வேண்டாம் என்றும், கட்சிக்கும் நாட்டுக்கும் சேவை செய்வதே தன் எண்ணமே தவிர, மேடையில் பேசுவதல்ல என்றும் அதிரடியாகக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், ரிவாபா சோலங்கி இருவருக்கும் கடந்த 2016 -ஆம் ஆண்டு திருமணம் நிகழ்ந்ததோடு, இந்த தம்பதியருக்கு நித்யானா என்கிற பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.