தியானம் செய்ய அனுமதி கேட்ட இளையராஜா!.. 'தன்னைவிட அதிகம் நேசித்த'... 'பிரசாத் ஸ்டுடியோ'வின் அதிரவைக்கும் பதில்!.. நொறுங்கிப் போன ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக சாலி கிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில்தான் பாடல்களை ரிக்கார்டிங் செய்து வந்தார். இங்கே, அவருக்கு தனியாக ரிக்கார்டிங் தியேட்டர் இருந்தது.
கிட்டத்தட்ட 6,000 பாடல்களை இந்த ஸ்டூடியோவில் இருந்துதான் இளையராஜா இயற்றியுள்ளார். தன் வீட்டை விட அதிகமாக நேசித்த இந்த இடத்தை கிட்டத்தட்ட ஒரு கோயில் போலவே இந்த ஸ்டூடியோவை இளையராஜா கருதி வந்தார்.
இந்த நிலையில், பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் தரப்பில் இந்த இடத்தை விற்கப்போவதாக கூறி இளையராஜாவை காலி செய்ய கூறியுள்ளனர். தான் கோயில் போல கருதி வந்த இடத்தை காலி செய்ய சொன்னதால் இளையராஜா அதிர்ந்து போனார்.
இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா தலைமையில் நடிகர்கள், இயக்குநர்கள் போராட்டம் கூட நடந்தது. ஆனால், பிரசாத் ஸ்டூடியோவின் உரிமையாளர் சாய் பிரசாத் கொஞ்சம் இறங்கி வரவில்லை.
இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும், ஒரே ஒரு நாள் மட்டும் அந்த இடத்தில் தியானம் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, சுமார் 40 ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த இடத்தில் இளையராஜாவை ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை எடுத்துக்கொள்ளவும் சில மணி நேரங்கள் தியானம் செய்து கொள்ளவும் அவருக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பதிலளிக்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரசாத் ஸ்டுடியோ தரப்பு , பொருட்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால் ரசிகர்கள் அதிகளவில் கூடி விடுவார்கள் என்பதால் அனுமதிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் நியமிக்கப்படும் ஆணையர் , இளையராஜா மற்றும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டும் ஸ்டுடியோவுக்குள் சென்று பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது தொடர்பாக விளக்கமளிக்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டு, நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
இந்த சம்பவம், இளையராஜா ரசிகர்கள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.